கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குஷீத்து கட்டுமான பணியாளர்கள், பொது மக்கள் மத்தியில் இன்னும் போதிய அளவுக்கு விழிப்புணர்வு வரவில்லை.
பாதிப்பு ஏற்கனவே கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன சுவர்களில் ஏற்படும் விரிசல்களை, எப்படி சரி செய்வது என்பது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
இவ்வகையில், சுவர்களில் ஏற்படும் விரிசல்களை சரி செய்வதில், ‘சிலாப் ஜாக்கிங்’ தொழில் நுட்பம் பிரபலமாகி வருகிறது. கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில் சுவரில் அல்லது கான்கிரீட் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டால், அந்த கட்டுமானத்தை உடைத்து புதியதாக கட்டுவது நடைமுறையில் சாத்தியமில்லை; அதே நேரம், அந்த விரிசலும் சரி செய்யப்பட வேண்டும். இதற்கு நல்ல தீர்வாக, ‘சிலாப் ஜாக்கிங்’ முறை அமைந்துள்ளது.
வழிமுறை
இதன்படி, விரிசல்கள் ஏற்பட்ட பகுதியை சுத்தம் செய்துவிட்டு, அந்த விரிசலின் தாக்கம் குஷீத்து ஆய்வு செய்யப்படும். சுவரில் எவ்வளவு ஆழத்துக்கும், அகலத்துக்கும் விரிசல் பரவியுள்ளது என்பதை கணக்கிட வேண்டும்.
மேலும், விரிசல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தையும் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் துவங்கப்படும்.
இதில், ‘சிலாப் ஜாக்கிங்’ முறையில், விரிசல்கள் ஏற்பட்ட பகுதியில், சிமென்ட், மணல், சுண்ணாம்பு சாந்து கலந்த கலவையை, இயந்திரங்களை கொண்டு அதிக அழுத்தத்துடன் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் கலவை, விரிசலின் இறுதி வரை உள்ளே செல்ல வேண்டும்.
பயன்
இடைவெளியை நிரப்புவதாக மட்டும் பார்க்காமல், விரிசலால் ஏற்பட்டுள்ள நுண்ணிய பகுதிகளையும் சென்று சேரும் வகையில், கலவையை செலுத்த வேண்டும்.
அதன்பின், விரிசல் ஏற்பட்ட இடத்தின் மேல் பகுதியில், பூச்சு வேலை மேற்
கொள்ள வேண்டும். விரிசலின் அளவின் அடிப்படையில் இதற்கான தேவை அதிகரிக்கும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066835
|