24 மணிநேரத்தில் 2400 ச.அடி வீடு சாதனைக்கு முயன்ற பொறியாளர்

22 ஜனவரி 2024   05:30 AM 27 ஜூலை 2018   03:16 PM


சுமார் 2400 ச.அடி கொண்ட ஒரு வீட்டைக் கட்ட எத்தனை நாளாகும்?

அது கான்ட்ராக்டர் பொறுத் தது. வீட்டு உரிமையாளரின் நிதி வசதியைப் பொறுத்தது. எப்படி இருந்தாலும் 3 மாதங்களாவது ஆகி விடும் ஒரு முழு வீடு நிறைவடைய.

 

ஆனால், பெங்களூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் ஒருவர் 48 மணி நேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 3 படுக்கையறைகள் கொண்ட 2400 சதுர அடி வீட்டைக் கட்டி முடித்து விட்டார்.

 

ரெபல் டிஸ்ரப்டிவ் பில்டிங் டெக்னாலஜிஸ் (REBEL Distruptive Building Technologies) என்கிற நிறுவனம் பெங்களூரில் 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேடி மேனன் என்பவர் தான் இந்த அதிவேக கட்டுமான சாதனையை கையிலெடுத்துக் கொண்டார். லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற, அவர் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கத்தான் திட்டமிட்டி ருந்தார்.

 

வீடு கட்டத் துவங்கும் பொழுது, தேவையான அனைத்து கட்டுமானப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, 20 பக்கங்கள் உடைய செக் லிஸ்டில் சரி பார்க்கப்பட்டு, முன் கூட்டியே தயாராக இருந்தன. சுமார் 20 கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 12 மணி நேரம், இரு ´ப்டிலும் வேலை பார்த்தனர். ஆனாலும்,2 நாட்களாக வேலை இழுத்து விட்டது.

 

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு இந்த கட்டுமான வேலையை துவங்கப்பட்டது.

 

ஒவ்வொரு பணிக்கும் எத்தனை நிமிடங்கள் என கணக்கு வைத்து, வேலையை பிரித்து, திட்டமிட்டு அதன் படி வேலை செய்ததை உள்ளூர் ஊடகங்கள் ஒளிப்பரப்பிக் கொண்டே இருந்தன.


ஆனால், திடீரென ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றம், கட்டுமான இயந்திரங்கள் உபகரணங் களில் ஏற்பட்ட திடீர் கோளாறுகள் காரணமாக 24 மணி நேரத்தில் 2400 ச.அடி என்பது நிறைவேராமல் போய்விட்டது. எனவே, 48 மணி நேரத்தில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

 

சாதனை முயற்சி தோல்வி, அடைந்தது குஷீத்து மேனன் கூறும் போது, ஒரு கட்டுமான
வேலை மிகக்குறுகிய கால கட்டத்தில் நடந்து முடிவதாலேயே பெருமளவு கட்டுமானச் செலவு குறையும். அதற்கு நவீன தொழிற்நுட்பம் மற்றும் தெளிவான திட்டமிடல் கை கொடுக்கும். இது முதல் முயற்சி தான். உடனே கட்டி முடிக்கப்பட்டு, அது பயன்பாட்டுக்கு வரும்போது தான், அதன் மீதான முதலீடு பலனளிக்கும். எனவே, இது வெறும் சாதனைக்கானது மட்டுமல்ல, வழிகாட்டுதலுக்கானதும் கூட.


அடுத்த முயற்சியில் 48 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாக குறைப்பேன். பின்பு, 24 மணி நேரத்தில் இதே அளவுடைய வீட்டைக் கட்டி முடிப்பேன் என்றார்.

 

அஸ்திவாரம் தவிர முழுக்க முழுக்க பிரிகேஸ்ட் முறையில் கட்டப்பட்ட இந்த வீட்டை கட்டி முடிக்க 25கோடி ரூபாய் ஆனதாக யூசியசிஸிஸி நிறுவனம் தெரிவித்தது.

 

மேனனின் அடுத்த முயற்சி டிசம்பர் இறுதியில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066838