விதிகளை மீறுகிற கட்டிடங்கள்

25 ஜனவரி 2024   05:30 AM 27 ஜூலை 2018   11:29 AM


சமீபத்தில் மேற்குச் சென்னை பகுதிக்கு செல்ல நேர்ந்த போது, பாடி மேம்பாலம் மீது கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டேன். வார இறுதி நாட்களில் இப்படித் தான் நெரிசல் இருக்குமாம்.

 

இதைவிட கடுமையான நெரிசல் இந்த பாடி சந்திப்பில் இருந்தது. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன்பு. மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு முயற்சியால் அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து பிரச்சனைத் தீர்ந்தது. இப்போது மறுபடியும் ஏன் இத்தனை டிராஃபிக்? என்றால் சரவணா ஸ்டோர்ஸ்.

 

வெற்றிலைப் பாக்கு கடைகளைப் போல ஒவ்வொரு முக்கியச் சந்திப்பிலும் சரவணா ஸ்டோர்ஸ், சூப்பர் சரவணா ஸ்டோராக பன்னடுக்கு மாடி களில் இடங்களை ஆக்கிரமிக்க பொதுமக்களும், பாதசாரிகளும், சாலைகளை ஆக்கிரமித்து விடுகிறார்கள். ஆட்டோ, கார் ஆட்டோ, கார்கள், இத்தியாதிகள் பாடி சந்திப்பின் பரந்த சாலைகளில் நிரம்பிவிடுகின்றன.

 

வெளிநாடுகளில் இது போன்ற பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங் கள் எங்கு நிறுவ வேண்டும்? நிறுவக் கூடாது? என்பதற்கெல்லாம் விதிகள் உள்ளன. ஷாப்பிங் கட்டிடத்திற்கு வருவோர், போவோர் களால், போக்குவரத்திற்கு தொந்தரவு ஏற்பட அங்கெல்லாம் ஒரு சதவீதம் கூட வாய்ப்பிருக்காது.

 

இங்கு என்னடா வென்றால், ஏற்கெனவே நெரிசலில் பிதுங்கி வழியும் பிஸியான பகுதிகளிலேயே ஏகப்பட்ட சரவணாக்கள் முளைத்து விடுகின்றன. போக்கு வரத்து எல்லை மீறும் போது, அந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி விடுவதோடு முடிந்துவிடுகிறது அரசின் கடமை.

 

திருவிழாக் காலங்களில் பாடி எம்.டி.எச் சாலைகளிலும் ஒரு வழி பாதையாக மாற்றக் கூடிய ஆபத்து இருப்பதாக தெரிகிறது. இதற்குத் தானா கட்டப்பட்டது பாடி மேம்
பாலம்? என்கிற கேள்வி நம்முள் எழுகிறது. ஜனங்கள் அதிகமாக கூடுகிற கட்டடங்கள் எங்கு நிர்மாணிக்கப் படவேண்டும்? என்கிற விதிகள் நம்முடைய உள்ளாட்சி அமைப்புகளிடமும் நிச்சயம் இருக்கும்.

 

ஆனால், அவற்றைத் திறந்து பார்க்காத படி அவற்றின் மீது கனமாக அழுத்துகிறது ரூபாய்க் கட்டு.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068086