உலகில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் துறைகளுள் உயிரிழப்பு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் நிறைந்த தொழிலாகவே கட்டுமானத்துறை கருதப்பட்டு வருகிறது.
எனவேதான், கட்டுமானத் தொழிலும் பாதுகாப்பும் இணை பிரியாதவையாக கருதப்படுகிறது.
அடிப்படையாகவே தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், கட்டிடத் தொழிலாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் அடிப்படை கல்வி முடித்தவர்களாகவோ, பட்டப்படிப்பு முடித்தவர்களா கவோ, பொறியியல் படிப்பு முடித்தவர்களாகவோ இருப்பர். இவர்களிடம் ஒரு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது எளிது. ஆனால், கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகவே இருக்கி றார்கள். கல்வி கற்காத இவர்களிடம் எந்த ஒரு புதிய கொள்கையும் கொண்டு போய் சேர்ப்பது என்பது சவாலாகவே இருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான்கட்டுமானத் தொழிலாளர் களுக்கென வேறு வகையில் நூதன
மான பயிற்சியும், விழிப்புணர்வும் தர ஒரு புதுவகை வழியை உருவாக்கியிருக்கிறது நெதர்லாந்த் கிராண்ட் செக்யூரிட்டி அன்ட் சேஃப்டி நிறுவனம். அதுதான் வீடியோ கேம் மூலமாக பாதுகாப்பு பயிற்சியினை அளிப்பது.
“படிக்காத மக்களுக்கு எப்படி வீடியோ கேம் சாத்திய
மாகும்? அதில் என்ன விதமான விளையாட்டுகள் இருக்கும்? இருக்கும் நேரத்தில் அவர்கள் விளையாடுவார்களா? வேலை செய்வார்களா? இந்த வீடியோ கேம்களினால் என்ன பலன்கள் கிடைக்கும்?’ எனக் கேட்டால், அதற்கான பதில்கள் அந்த வீடியோ கேம்களை விட, சுவாரசியமாக இருக்கின்றன.
முதலில் நம் எல்லோருக்கும் கணினி , வீடியோ விளையாட்டுகள் என்றால் உடனடியாக குழந்தைப் பருவத்துக்கும் மாறிவிடுவோம். ஆர்வமாகவும் கற்றுக் கொள்ளுவோம்.
கிட்டத்தட்ட அதே பாணியில்தான் இந்த வீடியோ கேம்களும் செயல்படுகின்றன.
இந்த கேம் பேக்கேஜ் என்பது பலவித விளையாட்டுக்களை பலவித லெவல்களில் விளையாடக் கூடியதாகும். மொத்தம் 20 சிடிக்களைக் கொண்டது
அதில் உள்ள சில சுவாரசியமான விளையாட்டுக்களைச் சொன்னால் உடனே இந்த கேம் சிடிக்களின் விலை என்ன? எனக் கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
1. பர்ஃபெக்ட் ப்ளேசிங் :
(Perfect Placing)
இதில் ஒரு கட்டிடத்திற்குத் தேவையான 150 க்கும் மேற்பட்ட பலவித கட்டிடப் பொருட்கள் இருக்கும். விளையாடுபவர்கள் அந்தந்த பொருட்களை சிந்தாமல்,
சிதறாமல், கீழே கொட்டாமல் அதற்குரிய இடங்களில் சரியாக ஸ்டோர் செய்ய வேண்டும். பிரிக்ஸ்,டைல்ஸ், கெமிக்கல்ஸ், பசை, பெயிண்ட், கண்ணாடி, ஸ்டீல் ஆங்கிள்கள், கேபிள்கள், பிரிகாஸ்ட் பேனல்கள் என ஒரு பெரும்பட்டியலே இருக்கின்றன.
ஒவ்வொரு சரியான பிளேஸ் மென்டுக்கும் மதிப்பெண்கள், போனஸ் உண்டு.
2. பிராப்பர் ஹாண்ட்லிங்
(Propper Handling)
இது பொருட்களைக் கையாளுதல் பற்றிய அறிவைக் கொடுப்பதாகும்.
திடப் பொருட்கள், திரவப்பொருட்கள், அபாயகரமான
பொருட்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், உடையக்கூடிய பொருட்கள், காஸ்ட்லியான பொருட்கள் என ஒவ்வொரு பொருட்களையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விளக்கமாக அறியச் செய்யும் விளையாட்டு நிலை இது.
3. சேஃப்டி வொர்க்கிங்:
(Safety Working)
இது பணியிடத்தில் நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அடுக்கும் விளையாட்டு.
அதாவது, மண் தோண்டுதல் சுவர் கட்டுமானம் செய்தல், சென்ட்ரிங் பணி செய்தல், கான்கிரீட் போடுதல், தரை அமைத்தல், பெயிண்ட் அடித்தல், எலக்ட்ரிக் , பிளம்பிங் பணி என 40-க்கும் மேற்பட்ட பணிகளை அது அதற்குரிய பாதுகாப்பு விதிகளோடு பணி செய்தால் பாயிண்டுகள் கிடைக்கும். அது மட்டுமல்ல, சிறிய மர வீடுகள் முதல் பெரிய வீடுகள் அடிக்கு மாடி புராஜெக்டுகள் என இதில் பலவித நிலைகள் உள்ளன என்பது வியக்க வேண்டிய அம்சம்.
4. வொர்க் அட் ஹைட்
(Work at height )
கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏ ற்படுவது என்பது உயரத்தில் இருந்து விழுவது என்பதுதானே. அதற்கு இடம் இல்லாமலா? உயரத்தில் இருந்து செய்யக்கூடிய பணிகளான கண்ணாடி மாட்டுதல், கிளேசிங் வொர்க் செய்தல், ஃபார்ம் வொர்க் முடுக்குதல், பிரிகேஸ்ட் பலகங்களை இணைத்தல், பெயிண்ட் அடித்தல், வால் பட்டி பூசுதல், ஸ்ட்ரக்சர் அமைத்தல்,
சுற்றுச் சுவர்களை அமைத்தல் போன்ற பல நிலைகள் இந்த வீடியோ கேம்களில் உள்ளன.
5. மெஷின் ஹாண்ட்லிங்
(Mashine Handling)
கிரேன்கள், டெலி ஹாண்ட்லர், மிக்ஸர், பொக்லைன். டிரில்லர், பேவர் மேக்கிங் இயந்திரம் என பலவகைப்பட்ட இயந்திரங்கள், சாதனங்களை பழுது படாமல் இயக்குவதற்கும், மிகக்கவனமாக இயக்குவதற்கும் இதில், விளையாட்டு நிலைகள் உள்ளன.
சரி . இது என்ன விதமான பலன்களை நமக்குத் தருகிறது?
இந்த விளையாட்டுகளை ஈடுபாட்டுடன் விளையாடுபவர்கள் தாமாகவே, கண்ணும் கருத்துமாக கட்டுமானத் தொழில் பாதுகாப்பு முறைகளைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான். இந்த விளையாட்டுகளில் முழுமுதன் நன்மை.
பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் கூட தன்னிடம் பணி புரியும் கான்ட்ராக்ட் நிறுவனம் வாயிலாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இந்த வீடியோ கேம் பயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்களிடையே இந்த கன்ஸ்ட்ரக்rன் சேஃப்டி கேம் விரைவில் ஆசிய நாடுகளிலும், குஷிப்பாக இந்திய கட்டுமான நிறுவனங்களிடையேயும் பரவும் என எதிர்பார்க்கலாம்.
விளையாட்டு வினையாகும் எனச் சொல்வார்கள். இங்கு விளையாட்டே நல்வினைகளை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு உலகெங்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066769
|