இங்கு சொல்லியிருக்கும் டிப்ஸ்கள் பல்வேறு வெற்றிபெற்ற கட்டுநர்களிடம் இருந்தும், அவர்தம் செயல்பாடுகளில் இருந்தும் கிரகிக்கப்பட்டவை.
நில பரிவர்த்தனையின் போது :
1. எவ்வளவுதான் தெரிந்த நபராக இருந்தாலும், மனை வாங்கும் போது, தேவையான அனைத்து விதமான சட்ட வழிமுறைகளையும் கடை பிடியுங்கள். அவர்தான் நன்கு தெரியுமே என்ற பேச்சே வேண்டாம்.
2. ரொக்கப் பணத்தை கையாளாதீர்கள். காசோலை மூலமே உங்கள் நிதி பரிவர்த்தனைகள் இருக்கட்டும்.
3. வழக்கறிஞர்களின் செலவு எதிர்கால வழக்குகளில் இருந்து உங்க ளை காப்பாற்றும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். சட்ட ஆலோசனைகளை நிச்சயம் பெறுங்கள்.
4. ஒரு நிலம் வாங்குகிறீர்கள் எனில், அந்த நிலத்தைச் சுற்றி உள்ள அனைத்து வகையான விஷயங்களையும் உற்று கவனியுங்கள். காலியாக இருக்கும் மற்ற நிலங்கள் யாருக்கானது? அவர்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.
5. உங்கள் புராஜெக்டின் சுற்றுப் பகுதிகளில் அரசு ஏதேனும் திட்டங்கள் கொண்டுவர இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது புராஜெக்ட் ஆரம்பித்த ஒருசில மாதங்களில், உங்கள் புராஜெக்டின் அருகிலேயே அரசினால் குப்பை கிடங்கு ஒன்று துவங்கப்பட்டால் நன்றாகவா இருக்கும்?
கட்டுமானப்பணி துவங்கும் போது :
6. மண்பரிசோதனை செய்யாமல் அஸ்திவார வேலை பற்றி நினைக்காதீர்கள். மண் பரிசோதனை என்பது கூடுதல் செலவல்ல. அது உங்களது அஸ்திவார செலவை குறைக்கின்ற வேலை.
7. அதே போன்று, பெஸ்ட் கண்ட்ரோல் என்பதும் தவிர்க்கப்பட முடியாத விஷயமாகும். முதற்கட்ட பணிகளில் முதற்பணியான இதனையும் தவிர்க்க வேண்டாம்.
8. பூஜைகளைஆர்ப்பாட்டமாக செய்யாமல் அமைதியாக நடக்குமாறு செய்துவிடுங்கள். மறக்காமல் உங்களது பழைய வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.
9. புராஜெக்டு நடைபெறும் இடத்தில் உங்களது புராஜெக்டுகளின் ஹைலைட்டை DISPLAY செய்ய மறக்க வேண்டாம். (நீலவண்ண பின்னணியில் வெள்ளை எழுத்துக்களை அமையுங்கள்).
10. கூடுமானவரை நிதிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
11. உள்ளூர்வாசிகளுடன் நட்புறவாக இருங்கள்.
12. புராஜெக்டு துவங்கும் போதே மரக்கன்றுகளை நட்டுவிடுவது உத்தமம். பெரும்பாலும் புராஜெக்டு முடியும் போதுதான் மரக்கன்று பக்கம் பில்டர்கள் பார்வையை திருப்புவார்கள்.
கட்டுமானப் பொருட்க ளை வாங்கும் போது :
13. மெட்டீரியல்க ளை சப்ளை செய்யக் கூடிய டீலர்களின் பெயர்களை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் தாண்டிய நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
14. கட்டுமானப் பொருட்க ளை வாங்கும்போது, கூடுமானவரை உங்களது பர்ச்சேஸ் மேனேஜருடன் நீங்களும் நேரில் போவது நல்லது.
15. புராஜெக்டு நடைபெறும் இடத்திலேயோ அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திலேயோ கட்டுமானப் பொருட்களை ஸ்டாக் வைக்கும் போது, நேர்த்தி அவசியமாகும். வகைவாரியாக அடுக்கி அதன் அடையாeம் மற்றும் இருப்பு குறித்த விவரங்கள் குறிப்பிடப் பட்டிருப்பது அவசியம்.
16. அவசியம் இருந்தாலொழிய, நீங்கள் முடிவு செய்த கட்டுமானப் பொருட்களின் பிராண்டை மாற்ற முயற்சிக்காதீர்கள்.
17. செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவற்றைப் படித்து அடுத்த ஆண்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை எவ்வாறு இருக்குமென யூகிக்க முடிவு செய்யுங்கள். தகுந்த நிபுணர்களையும், ஆலோசகர்களையும் கலந்துரையாடி விலை உயர்வு பற்றிய கருத்துக்களைகேளுங்கள்.
அவ்வாறு விலை உயர்வு இருக்கும்பட்சத்தில், அதன் தேவை உங்கள் புராஜெக்டிற்கு இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே வாங்கி வைக்கலாம்.
விற்பனையின் போது :
17. உடனுக்குடன் ஃப்ளாட்டுகள் புக்கிங் ஆகும் போது, விற்பனையை நிறுத்தி வையுங்கள். வீட்டின் விற்பனையைத் தாமதப்படுத்தும் போது சற்று விலை உயர வாய்ப்பிருக்கிறது (ஆனால், அதுவரை உங்கள் கையில் போதுமான அளவு நிதி இருக்க வேண்டும்).
18. மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் மூலம் உங்கள்
மனையை விற்பனை செய்வதை தவிருங்கள். அலுவலகத்திற்கு நேரடியாக வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல, நன்கு புலமைமிக்க, மொழி ஆளுமையுடைய நபர்களையே நியமியுங்கள்.
19. எந்தச் சூழ்நிலையிலும் தவறான வாக்குறுதிகளையோ, அதிகப்படியான விrயங்களையோ, உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், புராஜெக்டைப் பற்றியும் உங்கள் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள் கூறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
20. நிறைய கேள்விகள் கேட்டும் வாங்காமல் போன வாடிக்கையா ளரைக் கோபித்துக் கொள்ளாமல், புன்முறுவலுடன் அவர்களைப் பேசச் சொல்லுங்கள். இந்தப் புராஜெக்டில் இல்லை யன்றாலும் அடுத்த புராஜெக்ட்டுகளில் ஏதேனும் ஒரு வீட்டினை அவர் வாங்கக்கூடும். இல்லையயன்றாலும், அவரது மூலமாக வேறொருவர் உங்களது வாடிக்கையாளராகத்
திகழக்கூடும்.
அலுவலக நிர்வாகத்தின் போது :
21. தடுமாற்றம் இல்லாத நிர்வாகத்திற்கு அதன் தலைவர் சிறந்த ஒருங்கிணைப்புத் திறன் மிக்கவராக இருக்க வேண்டும்.
22. பொறுப்பான பணிகளில் ஆட்களை நியமிக்கும்போது, பலதடவை யோசித்து, அவர் மீது நம்பிக்கை வந்த பிறகே, அந்த வேலைக்கு நியமனம் செய்யுங்கள். ஆனால், நியமனம் செய்த பிறகு அவர் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.
23. புதிய தொழில்கள் ஏதேனும் நீங்கள் தொடங்குவதாக இருந்தால், கட்டுமானத்துறை சார்ந்த தொழிலாகவே துவங்குங்கள். (உதாரணம்: ரியல் எஸ்டேட், இன்டிரியர் டெகரேrன், டைல்ஸ் உற்பத்தி, ஆர்.எம்.சி.)
24. உங்க ளது நிறுவனத்தின் லோகோவை அடிக்கடி மாற்றாதீர்கள். அலுவலக முகவரியையும் அடிக்கடி மாற்ற வேண்டாம்.
25. உங்களது நிறுவனத்தின் ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாது, வாடிக்கையாளரும் உங்களை எளிதாக அணுகக்கூடியவராக இருங்கள்.
26. கட்டுமானம் தொடர்பான இதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை வeர்த்துக் கொள்ளுங்கள்.
27. புராஜெக்டுக ளை விற்ற பிறகு, திடீர் விசிட் செய்து
பராமரிப்புப் பணிகளை பார்வையிடுங்கள். விற்கப்பட்ட ஃப்ளாட்டுகளை பில்டராகிய நீங்கள் பார்வையிடுவது, உங்க ளைப் பொறுத்தவரை ஒரு சிறு பணி. ஆனால், வாடிக்கையாளரைப் பொறுத்தவரை அது ஒரு செய்தி.
28. ஃப்ளாட்டுகளை விற்ற பிறகு வாடிக்கையாளர்களின் அசோசியேஷன் முதலான உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
29. நிரந்தரமான பணியாளர்களை சிறு சர்ச்சைகளுக்காக இழந்து விடாதீர்கள். அவர்களை உங்கள் நிறுவன சொத்தாக பாவியுங்கள்.
30. நிறுவனத்தின் நடவடிக்கைகள் 100 சதவீதம் டிரான்ஸ்பரன்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கட்டுநர்களுக்கான பொதுவான டிப்ஸ்கள் :
31. ஆலோசனைகளை யார் சொன்னாலும் கேளுங்கள். ஏனெனில், ஒரு நல்ல ஆலோசனை என்பது யார் வழியாக வருகிறது? என்பது முக்கியமில்லை. அது எப்படிப்பட்டது என்பது மட்டுமே முக்கியம்.
32. எந்தெந்த வழிகளில் உங்களது நிர்வாகச் செலவைக் குறைக்கலாம்? என்பதை யோசியுங்கள்.
33. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கென எந்த இலவச இணைப்பையும் திணிக்காதீர்கள். நல்ல லொகேஷனில் கட்டுப்படியாகக் கூடிய விலையில் தரமான வீடு என்பது
மட்டுமே வாடிக்கையாளரை கவர்ந்திழுக்கும்.
34. வேண்டாத விவாதங்களில் வெற்றி பெற வேண்டும் என எண்ணாதீர்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என எதிராளியிடம் இனிமையாகச் சொல்லுங்கள்.
35. அலுவலகத்தில் எல்லோரையும் விட அதிக நேரம் உழைப்பவராக நீங்கள் இருங்கள்.
36. வாடிக்கையாளர்களிடையே பேதம் பார்க்காதீர்கள்.
37. மத அடையாளங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காகத்தான். அதை நிறுவனத்திலோ, புராஜெக்டிலோ திணிக்காதீர்கள்.
38. கட்டுமானச் செலவு குறைத்தல் என்பதே 20 சதவீத
லாபத்திற்குச் சமம். எனவே, சிக்கனமாக பொருட்க ளைப் பயன்படுத்துங்கள். அதிக சேதாரமாவதை கண்காணியுங்கள்.
39. நடுத்தர பில்டரானதும், சிறிய வகை புராஜெக்டுகளை துவங்கத் தயங்காதீர்கள்.
40. உங்கள் புராஜெக்டுகளின் தரம் புராஜெக்டின் காம்பவுண்டு கேட்டில் இருந்து துவங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2068052
|