எரி சாம்பல் கற்கள் காங்கிரீட் கெட்டிக் கட்டுகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளினுள் உள் வெப்பம் கூடுதலாக இருக்குமா?

25 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   02:16 PM


இப்படியாக - வாய்வழியாக - தவறான பரப்புரை செய்யப்படுகிறது.

 

கட்டுமானத்துறையில் பழையனவற் றிலிருந்து மாற விரும்பாத - புதியனவற்றைக் கடைபிடிக்க மறுக்கிற, கற்றுக்கொள்வதையே நிறுத்திவிட்ட சில கட்டுநர்களும் கட்டுமான மேற்பார்வையாளர்களும் - கு றிப்பாகக் கட்டடமேஸ்திரிகளும் தான் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான கருத்தியலை (அல்லது அவர்களின் மூடநம்பிக்கையை) விதைக்கிறார்கள். அதைக்கேட்கும் சில பயனாளர்கள் (அப்படி என்றால்) எங்கள் கட்டடங்களில் எரிசாம்பல் செங்கற்களையோ காங்கிரீட் கட்டுகளையோ பயன்படுத்தக்கூடாது என்று தடுக்கிறார்கள்.

 

எரி சாம்பல் கற்கள் (Flyash Bricks) &) & / காங்கிரீட் கட்டுகள் ((Precast solid concrete Blocks) ) - சாதாரண செங்கற்களைவிட எடை மிகுந்தவை (அதாவது கெட்டித்தன்மை Density & Stiffnessகூடுதலானவை). எனவே வெளிவப்பம் இதனுள்ளே கடந்து போக நேரம் மிகுதியாகிறது. அல்லது இவற்றின் வெப்பம் கடத்தும் திறன் குறைவானது என்பதைச் சோதனை முடிவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

 

எனவே எரிசாம்பல் கற்கள் / கெட்டிக் காங்கிரீட் கட்டுகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளினுள் உள்வெப்பம் கூடுதலாக இருக்கும் என்பது தவறான மனப்பிரமை, உண்மையில்லாத புரிதல்; இக்கருத்தியலுக்கு எவ்வித அ றிவியல் / பொறியியல் ஆதாரமும் அடிப்படையும் கிடையாது. மாறாக இவைகொண்டு கட்டப்பட்ட வீடுகளில் உள்வெப்பம் - செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையோடு ஒப்பிடும் போது - குறைவாகவே இருக்கும் என்பது தான் உண்மை.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068039