காசு சிக்கனமான “கிரீன் வால்’ வால்பட்டி (சதுர அடிக்கு இனி 40% மிச்சப்படுத்தலாம்)

25 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   04:40 PM


வழக்கமாகச் சந்தையில் கிடைக்கும் வால்பட்டியை விட, 40 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கும் அதிகத் தரம், அதிக வெண்மை, அதிக கவரேஜ் கொண்ட கிரீன் வால்- வால்பட்டி பில்டர்கள், வீடு கட்டும் பொதுமக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறது

 

தற்போது சிமெண்ட் பூச்சுக்கும் , பெயிண்ட் பூச்சுக்கும் நடுவில் வால்பட்டி என்கிற மிக முக்கியமான பூச்சு கட்டயமாகிவிட்டது. உயர்குடி, நடுத்தர மக்களின் வீடுகளுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்த வால்பட்டி பூச்சு தற்போது அனைத்து வகை வீடுகளுக்கும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

 

ஆனால், 40 கிலோ கொண்ட வால்பட்டியின் இன்றைய சந்தை விலை ஏறத்தாழ ரூ.1,100க்கு விற்கப்படுகிறது. வாடிக்கை யாளர்களுக்கு நல்ல, தரமான வால்பட்டி பூச்சுடன் கூடிய வீட்டைத் தரவேண்டும் என நினைக்கும் பில்டர்களுக்கும் கான்ட்ராக்டர்களுக்கும் சரி,

 

சிக்கனவிலையில் வீட்டைக் கட்ட நினைக்கும் பொதுமக்களுக்கும் சரி, வால்பட்டி பூச்சுக்காகச் செலவழிக்கும் தொகை அவர்களது பொருளாதாரத்தை சற்று நெருக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், “இனி நீங்கள் வால்பட்டிக்காக செலவழிக்கும் தொகையில் 60 விழுக்காடு மட்டுமே செலவு செய்தால் போதும். உயர்தர வால்பட்டி பூச்சினை நாங்கள் அளிக்கிறோம்’ என்கிறார் கோவையைச் சேர்ந்த கிரீன் இந்தியா எகோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி கவிதாராஜன் அவர்கள்.

 

வால்பட்டி பூச்சில் ஏறத்தாழ 40% வரை கட்டுமான செலவை மிச்சப்படுத்த முடியும் என்பது கட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய செய்தி என்பதால், திருமதி கவிதாராஜனை நேரில் சந்தித்து அவர்களது வால்பட்டியின் பல்வேறு தன்மைகளை கேட்டறிந்தோம்.

 

பில்டர்ஸ்லைன்: உங்கள் வால்பட்டியின் பல்வேறு குணநலன்கள் எல்லாம் அப்புறம். முதலில் 40% விலைக் குறைப்பில் எப்படி உங்களால் வால்பட்டியை சந்தையில் தர முடிகிறது? அதைச் சொல்லுங்கள்.

 

“”உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமெனில், எங்கள் நிறுவனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். நாங்கள் முதலில் வால்பட்டிக்கான மூலப்பொருட்களை ஜப்பான் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை வால்பட்டி தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தோம். அது தான் உங்களுக்குச் சந்தையில் ரூ.1050, ரூ.1100 மதிப்பில் 40கி.கி பைகளாக கிடைக்கின்றன.

 

வால்பட்டி மூலப்பொருட்களை தரமானமுறையில் தயாரித்து, பெரிய நிறுவனங்களுக்கு விற்பதையே தான் பல ஆண்டுகள் நாங்கள் தொடர்ந்து செய்து வந்தோம். 
எனது தந்தை செய்து வந்த இந்த நீண்ட நாள் வணிகத்தை பின்பற்றி நானும் அதையே செய்து வந்தேன். இந்தச் சூழ்நிலையில் எங்கள் நெருங்கிய உறவினர் திரு. ராமலிங்கம் என்பவர் (IIT யில் வேதியியல் துறையில் Phd பட்டம் பெற்றவர்) எங்களிடம், “நீங்களே ஏன் வால்பட்டியை தயாரித்து விற்கக்கூடாது?’ என கேள்வி எழுப்பினார்.

 

“அதைத்தான் மற்ற நிறுவனங்கள் செய்கிறார்களே. அதில் நாம் புதிதாக செய்வதற்கு என்ன இருக்கிறது?’ என்றேன்.“நிச்சயம் இருக்கிறது. வழக்கமான வால்பட்டியில் ஒயிட் சிமென்ட், டாலமைட், பாலிமர் போன்ற ரசாயணங்களே நிறைந்திருக்கும். நாம் அவற்றோடு 30% ஆர்கானிக் பொருட்களைக் கூடுதலாகக் கொண்டு வால்பட்டி தயாரிப்போம். இது வழக்கமானவால்பட்டியை விட மூன்று மடங்கு ஆயுளைக் கொடுக்கும். மேலும், வால்பட்டிக்கான மூலப் பொருட்கள் நம்மிடையே இருப்பதால் மற்ற பெரிய நிறுவனங் களைவிட மூன்ஷீல் ஒரு மடங்கு விலைக் குறைவாக தர முடியும்’ என ஆலோசனை சொன்னார்.

 

அதன் பிறகு, வால்பட்டி தயாரிப்பிற்கென புதிய தொழிற்சாலையை நிர்மாணித்தோம். ஆர்கானிக் பொருட்களைக் கொண்ட வால்பட்டியை நாங்களே தயாரித்தோம். சந்தை விலையை விட மூன்றில் இரண்டு மடங்கு மட்டுமே விலையை நிர்ணயித்தோம். தற்போது நாங்களே எதிர்பார்க்காத வகையில் ஒரு நாளைக்கு 300 பைகள் கோவை மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகிறது’’.

 

வழக்கமான வால்பட்டிக்கும் கிரீன் வால் - வால்பட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி?
“”விலை வித்தியாசம் தான் எங்கள் வால்பட்டி வெற்றிக்கான முதற்காரணம். நாங்கள் ஜப்பானிய தொழிற் நுட்பத்தை வாங்கி பின்பற்றுவதால் கிரீன்வால் - வால்பட்டியில் ஒரே மாதிரியான தரம், அதாவது கன்சிஸ்டன்சி கிடைக்கும். ஒரு புராஜெக்டில் பல பேட்சுகளில் வால்பட்டி வந்து இறங்கும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு நிறத்தைக் கொண்டதாக இருக்கும்.

 

ஆனால், கிரீன் இந்தியா வால்பட்டி ஒரே மாதிரியான மிக்ஸிங் மற்றும் பிராஸசிங் முறையை கடைப் பிடிப்பதால் சமச்சீரான வால்பட்டிப் பூச்சு உங்களுக்கு கிடைக்கும். அதே போன்று கிரீன் வால் - வால்பட்டியில் அதிக பிரகாசத்துடன் கூடிய வெண்மை யும், வழவழப்பும் கிடைக்கின்றன. கவரேஜும் அதிகம். ஒரு கிலோ கிரீன்வால்- வால்பட்டியில் 20 முதல் 22 ச.அடி பரப்பு வரை பூச முடியும். நிலையான தரத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் கிரீன்வால் - வால்பட்டி உத்திரவாதம்’’.

 

கிரீன் வால் - வால்பட்டியை தமிழ்நாடு முழுக்கச் சந்தைப்படுத்த நீங்கள் முன்வைத்திருக்கும் திட்டங்கள் பற்றி.

 

‘’ISO உள்ளிட்ட பல்வேறுதரச்சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் கிரீன் வால் - வால்பட்டியை நாங்கள் துபாய், எகிப்து போன்ற அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். வாரணாசி போன்ற வட இந்திய நகரங்களுக்கும் கிரீன் வால் - வால் பட்டி சப்ளை ஆகிறது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுக்க இதனைக் கொண்டுச் செல்ல இருக்கிறோம். அசாத்தியமான விலைக் குறைவு, அதிக பிராகாசம், அதிக கவரேஜ் இவைக் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில், கிரீன் வால் - வால்பட்டி தமிழ்நாட்டில் முதன்மையான இடத்திற்கு வரும் என எதிர்பார்கிறோம்.

 

மாவட்டம், நகரங்கள், ஊர் தோறும் டீலர்கள், விநியோகிஸ்தர்களை நியமிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியா முழுக்க பில்டர் கள், கான்ட்ராக்டர்கள், புரா ஜெக்ட் மேலாளர்கள், வீடு கட்டும் பொதுமக்கள் என யார் எத்தனை பேக்குகள் கிரீன் வால் - வால்பட்டியை கேட்டாலும், உடனே சப்ளை செய்யக் கூடிய அளவிற்கு எங்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார் கவிதாராஜன்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068040