மவுலிவாக்க இரண்டாவது கட்டிடத்தை இடிக்காமலேயே அதை உறுதிகூட்டி காப்பாற்ற முடியும் என்கிறார் ஒரு பொறியாளர்
அறுபத்தி ஒரு பேர் உயிரிழக்கக் காரணமான, மௌலிவாக்கம் கட்டிட விபத்து நடந்து, சென்ற ஜூன்28-ம் தேதியோடு இரு ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் இச்சூழ்நிலையில், எஞ்சியுள்ள, ‘ஏ பிளாக்’ கட்டடத்தை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. கட்டடத்தை இடிக்க சென்ற மே 12ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த, நான்கு வார காலக்கெடு முடிந்த பிறகும், கட்டடத்தை இடிப்பது தொடர்பான விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் தொடங்கப் படவில்லை.
ஒரு பெரிய கட்டடத்தை வெடி வைத்து தகர்க்கும் பணியை மேற்கொள்வது ரிஸ்கான வேலை என்பதால், இது வேறு பிரச்சனைக்கும், பாதிப்புகளுக்கும் வழி வகுத்திடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த பணி தாமதமாகிறது என சி.எம்டி.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,“”மவுலிவாக்கம் இரண்டாவது கட்டிடத்தை இடிக்கத் தேவையே இல்லை, அதை உறுதிப்படுத்தினாலே போதும் ‘’என்கிறார் நாம் நன்கு அறிந்த மூத்த கட்டுமானப் பொறியாளரும், முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளருமான திரு.அ.வீரப்பன் அவர்கள்.
மேலும்,””மவுலிவாக்கம் இரண்டாவது கட்டிடத்தை இடிக்கச் சொல்லும் யாருக்குமே சமுதாய அக்கறை / பொறுப் புணர்வு ஒரு சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை, இவர்கள் படித்தறிந்த கட்டுமானப் பொறியியல் தம் திறமை மீது ஒரு சிறிதும் நம்பிக்கையில்லை.
அரசுத் துறைகள் மற்றும் கல்வித் துறையிலேயே பணியாற்றுவதால் - தாங்கள் எந்தப் பொறுப்பையும் (Responsibility and risk - accountability) ஏற்கத் தயாராக இல்லை. இங்கே பொறுப்புத்துறப்பே முதன்மையாக உள்ளது. இதற்காக இவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை.
கட்டடத்தை இடிப்பது எளிது, ஆனால் வலிமைப்படுத்தித் தூக்கி நிறுத்துவது கடினம் என்பதால் யாரும் அதைப்பற்ஷீ பேசுவதில்லை’’ எனச் சீறுகிறார் திரு.வீரப்பன்மேலும் அவர் கூறுகையில்,“”இக்கட்டட அடுக்கின் வலிமை மற்றும் உறுதித் தன்மையை ஆராய நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தம்முடைய அறிக்கையில்...
*இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வலிமை குறைவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
*கட்டட வடிவமைப்பில் தலையாய குறைபாடுகள் உள்ளன.
*பக்கவாட்டு கிடைமட்டவிசைகள் (நிலநடுக்கம் மற்றும் வேகமான காற்று இவை) ஏற்படும் போது இக்கட்டடம் உடைந்து விழுந்து பெரிய நாசத்தை ஏற்படுத்திவிடும் எனத் தெரிவித்த தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கட்டிடத்தை இடிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மீஅடிமனை மண் கீழிறங்கவில்லை, தரைகீழ் அடித்தளம் (Basement floor) வலுவாக உள்ளது. ஆனால் மேல்தளங்களில் போடப்பட்ட கான்கிரீட் விட்டங்களும் பாரம் தாங்கும் தூண்களும் - தரத்திலும் வலிமையிலும் மிகக் குறைவாய் உள்ளதால் உடைந்து விழுந்தன’
என்றெல்லாம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை வடிவமைப்பு மேற்பார்வைப் பொறியாளர் தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
* இதைப்போலவே CREDAI வல்லுநர் குழு ஒன்று இக்கட்டு
மானத்துள், வலிமை மிகக் குறைந்த தரம் தாழ்ந்த விட்டங்களும், தூண்களும் இருந்தமையால் இடிந்து நொறுங்கியது என்று தெரிவித்தது. ( CREDAI வல்லுநர் குழுவில் IIT சென்னை கட்டுமானப் பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதன்மைப் பேராசிரியர், கிரெடாய் தலைவர் முதலியோர் இடம் பிடித்திருந்தனர்).
*அடுக்குமாடிக் கட்டுமானத்தில் உறுதியாக நிலைத்து நிற்கத் தேவையான Strong column sand weak beams தத்துவம் இதில் செயற்படுத்தப்படவில்லை என்பதும் இக்கட்டடம் இடிந்து விழ முக்கியமான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தவிர, தமிழ்நாடு அரசு நியமித்த நீதிபதி இரகுபதி ஆணையமும் - இரண்டாவது அடுக்குமாடி கட்டடத்தை இடித்துவிடுவதே பாதுகாப்பானது என்று பரிந்துரைத்தது.
இப்போது என் கேள்வி என்னவெனில், இவைகளுள் எந்த வல்லுநர் குழுவோ, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளரோ - ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ - கடந்த 2 ஆண்டுகளாக (நவம்பர் / டிசம்பர் 2015 தொடர் பெருமழையையும் புயற்காற்றையும் தாங்கி உடைந்து விழாமலிருக்கும்) - “இரண்டாவது பன்மாடிக் கட்டடத்தை மீண்டும் வலிமைப்படுத்தி தூக்கி நிறுத்தலாம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைக் காணுங்கள், தெரிவியுங்கள் என்றும் அப்படி வழிவகை உள்ளதா... ஆராய்ந்து சொல்லுங்கள்’ என்றும் ஏன் அறிவிக்கக்கூட முயலவில்லை ?
இது நமக்கெல்லாம் பெருத்த அவமானமே.
ஆனால், நான் மாநிலச் செயலாளராக உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தைச் சார்ந்த பொதுப்பணித் துறையில் சிறப்பாக பணியாற்ஷீய முன்னாள் பொறியாளர் கள் குழு மட்டும் “இரண்டா வதாக தற்போது நிற்கும் பன்மாடிக் கட்டடத்தை எங்களிடம் தாருங்கள். நாங்கள் அதைத் தரத்தோடு வலிமைப்படுத்தி - இன்னும் 60 ஆண்டுகளுக்கு உறுதியாக நிற்கச் செய்வோம், அதுவும் அதனுடைய 25% செலவில் ‘ என்று 06.07.2014 அன்றே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக இருந்த திரு. மோகன் வர்கீஸ் சுங்கத் அவர்கட்கு நேர்முகக் கடிதமே (D.O Letter) எழுதினோம். இதுவரை அதற்கு பதில் இல்லை.
நாம் உறுதியுடன் சொல்லுகிறோம், மவுலிவாக்கம் இரண்டாவது அடுக்கு மாடிக் கட்டடம் The Belief கண்டிப்பாக இடிக்கப்படக் கூடாது, தூக்கி நிறுத்தப்பட வேண்டும்,
ஏனென்றால்...
இன்றைய கட்டுமானத் துறையில் வியக்கத்தக்க நவீன முனேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, மிகப்பெரும் இயந்திரங்கள், வலிமையூட்டும் கட்டுமானப் பொருட்கள் (Glass, Carbon fibres, Woven mesh nets, Srengthening Laminates, Steel Sections) ஏராளமாக உள்ளன. மேம்பட்ட கட்டுமான வலிமைப்படுத்தும் உத்திகளும் (Advanced Techniques / Reconstruction practices such as jocketing, Hilti technology, Grouting, Steel plating, Composite sections etc.) இன்று பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைச் செயற்படுத்தும் Chemical applicators எனும் திறம்படைத்தவர்கள், இவர்களை வழி நடத்தும் திறமையான - வல்லமை படைத்த தலப்பொஷீயாளர்களும் உள்ளனர். (இன்று மருத்துவத்துறையில் - அறுவைப் பிரிவில் எவ்வளவு முன்னேற்றங்கள். ஏன் கட்டுமானப் பொறியியலில் மட்டும் பயன்படுத்த தயங்குகிறோம்).
இக்கட்டடம் ஒரு சமுதாயச் சொத்து. ரூ. 30 கோடிக்கு மேல் இதைக் கட்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது வீணாக்கப்படக் கூடாது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை -50க்கும் மேற்பட்ட தனியார் ரூ.50/60 இலட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். இது அவர்கள் சிரமப்பட்டு உழைத்துச் சேர்த்த தொகை. இவர்களுக்கு யார் இந்தத் தொகையைத் திருப்பித் தருவார்கள்?
பெரிதும் பாதிக்கப் பட்டவர்களும், கட்டுமானத்துறை சார்ந்த பொறுப்பாளர்களும் - ஏன் ஊடகத்துறையினரும் உரத்த குரல் எழுப்பி இக்கட்டடம் இடிக்கப்படுவதைத் தடுத்திட வேண்டும். எனவே, உறுதியாக நிச்சயமாக இந்தப் பழுதுள்ள The Belief 11 மாடி கட்டடத்தை வலிமைப்படுத்தித் தூக்கி நிறுத்த முடியும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் புதுப்பிக்க முடியும். இந்தப் பணியில் அனுபவமுள்ள Er. A. Veerappan & Associates
Experts Team செய்து தரத் தயாராய் உள்ளது.
எனவே மீண்டும் தெரிவிக் கிறோம்.
கட்டுமானப் பொறியியல் திறமை / வல்லமை பழுதுள்ள கட்டடத்தை இடிப்பதில் இல்லை. அதை வலிமைப்படுத்தித் தூக்கி நிறுத்துவதில்தான் இருக்கிறது’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் மூத்த பொறியாளர்அ.வீரப்பன்
ஒரு முப்பது கோடி ரூபாய் கட்டுமானத்தை வெறும் கட்டிடக் குப்பையாக மாற்றி விடத் துடிக்கிற அதிகாரிகள் அனைவரும் பொறி. அ. வீரப்பன் போன்ற மூத்த பொறியாளர்களின் பேச்சை செவிமடுத்து அதில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய முன் வர வேண்டும். அக்கட்டடத்தின் சுற்றுப் புறத்தில் வாழ்பவர்களுக்காக மட்டுமல்ல, அதில் வீடு வாங்கி அல்லல் படுவர்களுக்காக மட்டுமல்ல, இனி பன்னடுக்கு மாடி கட்டடங்கள் குறித்தவீண் அச்சங்களைப் போக்கு வதற்காகவாவது அந்த இரண்டாவது கட்டடம் இடிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் விருப்பம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066708
|