கட்டுமானங்களுக்கு - குறிப்பாக எங்கெங்கு மணலும் சிறிது களிமண்ணும் கலந்துள்ள இடங்களிலும் விவசாய நிலமாக இருந்து கட்டுமான இடமாக மாற்றப்பட்ட பகுதிகளிலும் கரையான் தடுப்பு மருந்து ((Pest Control) அடிப்பது மிக மிக இன்றியமையாதது. மேலும் கீழடித்தளம் (Basement Floor) உள்ள கட்டுமானங்களிலும் கரையான் தடுப்பு மருந்து பெரும்பாலும் அடிக்கப்படுகிறது.
இது கட்டடச் செலவினை ஒரு வகையில் கூடுதலாக்குகிறது. மேலும் கரையான் தடுப்பு மருந்து அடித்த பின்பு - மழை பெய்வதால் - இதன் வீரியம் நான்கைந்து ஆண்டுகளுக்குள்ளே பெரிதும் குறைகிறது. எனவே 5 ஆண்டுகளுக்குப் பின்னே மீண்டும் கரையான் தடுப்பு மருந்து அடிக்கவேண்டிய கட்டாயம் நேரிடுகின்றது.
இதற்கு மாற்றாக... பதிலாக...
கருங்கல் உடைதூள் (Stone Crusher Dust - Quarry Dust) கொட்டி வெட்டுக் குழிகளை நிரப்புவதாலும் கட்டடத்தைச் சுற்றி வெளிச்சுவர்கள் ஓரமாக 1’0” (300மி.மீ) உயரத்திற்கு கொட்டி அணைப்பதாலும் கரையான் சேதத்தைத் தடுக்கலாம். கருங்கல் உடைதூளில் செடி கொடிகள் புல் பூண்டு கூட முளைப்பதில்லை. எனவே கரையான் புற்று உருவாவதை முற்றிலும் தடுக்கிறது. எனவே செலவு மிகவும் குறைந்த பெரும்பயன் தொடர்ந்து அளிக்கக்கூடிய வீணான வெற்றுப் பொருள் - கல்லுடைத்தூளை முழுமையாகப் பயன்படுத்துவோம். கரையான் அரிப்பு கவலையின்றிக் கட்டடங்களைப் பராமரிப்போம். -
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066718
|