தனியாக குடியிருப்பு வீடுகள் கட்டும்போது உரிமையாளர்கள் பலரும் சுற்றுச் சுவர் கட்ட - செலவு குறைந்த சிக்கனமானவற்றையே தெரிந்தெடுக்க விரும்புகின்றனர். இந்தச் சுற்றுச் சுவர்வேலை குடியிருப்பு கட்டுமானத்தில் கடைசிவேலை. அதற்குள் ஆன கட்டட செலவு மதிப்பீட்டுச் செலவை விட மிகவும் எகிறியிருக்கும்.
குறிப்பாக சமையலறை - மின் சாதனங்கள் - உள் அலங்கார வண்ணப்பூச்சுகள் மற்றும் வரவேற்பறை மரவேலைகள் - மதிப்பீட்டுச் செலவைவிட இரண்டு / மூன்று மடங்கு கூடுதலாக ஆகியிருக்கும். எனவே, கையில் இருப்பதை வைத்துச் சுற்றுச் சுவரைக் கட்ட வேண்டியிருக்கும்.
அவர்கட்கு தேவையான மாற்று வடிவமைப்புகள்
1. அடிமணை மண் களிமண்ணாக இருந்தால் 200மிமீ (8”) விட்டமுடைய 2.40மீட்டர்/2.10மீட்டர் ஆழமுடைய அடிபெருத்த குத்துத் தூண் (single under reamed pile) அடித்தளம் - 3.60மீ - 4.50மீ இடைவெளியில் போட்டு பிணைப்பு விட்டம் (Grade beam at ground level) கொண்டு இணைக்க வேண்டும்.
அதற்கு மேலே 1650மிமீ/1800மிமீ (5’6” மிலி 6’0”) உயரத்திற்கு 100மிமீ (4”) கனமுடைய முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் 400 X 200 X 100மிமீ கட்டுகளைக் (Precast solid concrete block masony in cm 1:4 in between RC Columns placed at 4.5mm c/c) கொண்டு சுவர் எழுப்பலாம். இதற்கு பூச்சு வேலை (Plasting) தேவையில்லை. இடைக்கோடு அடித்தாலே போதுமானது.
2. அடிமணை மண் கெட்டித் தரையாக (Hard strata) இருந்தால் முன்வார்த்த காங்கிரீட் தூண்கள் 6’0” இடைவெளியில் நிறுத்தி இரண்டடி ஆழம் அடித்தளம் (Isolated Footing 450 x 450 x 150mm) தரைக்கு மேலுள்ள 5’6’/6”0” உயரத்தை 25மிமீ கனமுடைய ஒவ்வொன்றும் 300மிமீ உயரமுடைய முன்வார்த்த காங்கிரீட் பலகங்களை இரு தூண்களுக்கு இடையேச் சொருகி பொருத்தி அமைக்கலாம்.
இதற்குக் குறைந்தது M10 தரக் காங்கிரீட்டையோ M15 தரக் காங்கிரீட்டையோ பயன்படுத்திட முன்வார்ப்பாளரைக் கேட்டுக் கொண்டு அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் M5 / M7.5 தரக் காங்கிரீட்டைப் பயன்படுத்துவர். அவரி வலிமையாக உறுதியாக இருக்காது. பாதுகாப்பானதாக இருக்கும். செலவு மிக மிகக் குறைவு. மொத்தச் சுற்றுச் சுவரையும் (60’ மு 40’) 2 அல்லது 3 நாட்களில் நிறுத்திக் கட்டிவிடுவார்கள். தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067347
|