கட்டுநர் சிலர் செயற்கை மணலைக் கட்டுவேலைக்குப் பயன்படுத்தும் போது இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் கலவை கெட்டிப்படுத்தப்படாமலும் வலிமையில்லாமலும் கொல்லுறு அல்லது கூரான கம்பியால் கீறும்பொழுது செயற்கை மணல் (M Sand) தனித் தனியாக உதிரியாக வருகிறது என்று கவலையோடு தெரிவிக்கின்றனர்.
இதனால் செங்கல் கட்டு வேலையில் செயற்கை மணல் கலவையினைப் பயன்படுத்தாமல் சிலர் தவிர்க்கின்றனர். இக்குறைபாட்டை எப்படித் தடுப்பது?
எந்தக் காரணத்தால் சிமெண்ட் கலவை - செயற்கை மணலோடு பிணைப்பினை (ஒட்டுத்தன்மை) ஏற்படுத்தவில்லை என்று தெரியவில்லை. செயற்கைமணல் உருண்டையாக இல்லாமல் கனசதுர வடிவில் இருப்பதாலும் மேற்பரப்பு சொர சொரப்பாக இல்லாததாலும் ஏற்படலாமோ என்ற அய்யப்பாடு உள்ளது. சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
(அ)... கட்டுக்கலவை (செயற்கை மணல்கலவை)யில் ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு super plasticiser 100 மில்லி லிட்டர் முதல் 150 மில்லி லிட்டர் வரை கலந்து(cera plast 100 / cera plast 200) தயாரிக்கப்பட்ட கலவை இக்குறைபாடு இன்றிக் கெட்டியாகவும் வலிமையோடும் இருக்கும்.
ஆனால் கலவையினை அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். நாள் முழுவதும் வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது; ஒரு மணி நேரத்திலேயே கெட்டியாகிவிடும்.
(ஆ) செயற்கை மணலுக்குப் பதிலாக - கருங்கற் உடை சல்லி மாவுடன் (Stone Crusher Dust - Quarry Dust) - சிமெண்ட் மற்றும் Ceraplast 100/200இல் 150 மில்லி லிட்டர் கலந்து கலவை தயாரித்துக் கட்டினால் வலிமையாகவும் கெட்டியாகவும் இருக்கும், இக்கலவையின் செலவும் மிகக் குறைவே. பல கட்டடங்களில் இதைப் பயன்படுத்தி வலிமையினை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067408
|