நம்முடைய கட்டுநர் பலரும் (பொதுவாக சிறு - நடுத்தர நிலை) பல ஆண்டுகளாகவே கொள்ளளவு முறை காங்கிரீட்டையே(Volume Batching concrete that too 1:2:4 / 1:1.5:3) பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய காங்கிரீட்டில் மூன்று வித குறைபாடுகள் உள்ளன.
1. இம்முறையிலான காங்கிரீட்டின் 28 நாளைய வலிமை உறுதிப்படுத்தப்படவில்லை (due to water cement ratio 0.55 & no control over volume of water used).
2. காங்கிரீட்டின் தரமும் குறைவாகவே உள்ளது (below standard concrete - M25) 3. 1 : 1.5 : 3 தரக் காங்கிரீட்டில் சிமெண்டின் அளவு -430கிலோ/ஒரு கன மீட்டருக்கு - 8.50 மூட்டைகள் தேவைப்படுகின்றன. இதன் வலிமையோ னி20 (200கிலோ / ச.செ.மீட்டர்). கூடுதலான சிமெண்டால் இதன் உற்பத்திச் செலவு கூடுதலாகிறது.
இதற்குப் பதிலாக - நம் கட்டடங்களின் வலிமை - உறுதி வாழ்நாள் இவற்றைக் கூட்டிட வடிவமைத்த காங்கிரீட் (Design mix / controlled concrete - especially M25 Grade Concrete) பயன்படுத்தும் போது குறிப்பாக தண்ணீர் : சிமெண்ட் விகிதம் 0.42-0.45 ஆகவும் கலக்கும் தன்மையினை (workability) கூட்டிட superplasticiser - CERAPLAST 300 (300ml per bag of cement) சேர்த்து காங்கிரீட்டை உற்பத்தி செய்திட 340கிலோ / 350கிலோ (7மூட்டைகள் / ஒரு கனமீட்டருக்கு) மட்டுமே தேவைப்படுகிறது.
இதன் வாயிலாக இக்காங்கிரீட்டின் வலிமை - 2 25N/mm2 (250kg/cm2) க்கு மேலாகவே உள்ளது. ஒட்டு மொத்தச் செலவும் குறைகின்றது. தரமும் வலிமையும் இயல்பாகவே கிடைக்கிறது.
M25 Grade concrete is lesser than 1 : 1 1/2 : 3 Volume batching by 6.15% எனவே, வடிவமைத்த M25 தரக் காங்கிரீட் டையே (admixed with superplasticiser) பயன்படுத்தித் தரமான வலிமையான செலவு குறைவான கட்டடங்களைக் கட்டுவோம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067390
|