கூவம் ஆற்றில் ஆங்காங்கே பில்லர்கள் அமைத்தால் வெள்ளக் காலங்களில் மழைநீர் செல்ல தடை ஏற்பட்டு நகரமே மூழ்கும் எனச் சொல்லி மதுரவாயில் டூ சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடை வாங்கிய அரசும் நாடும் நம்முடையது.
இந்தத் தொல்லை எல்லாம் எதற்கு? என்று வெளிநாட்டில் பில்லர்களே இல்லாமல், ஆற்றைக் கடக்க ஒரு பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
கனடாவில், கால்காரி என்கிற நகரில் 100மீ அகலத்தில் ஓடுகிற ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆற்றில் பில்லர்கள் நிறுவினால், அது நீரோடத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் புதிய தொழில்நுட்பம் உதவியுடன் பில்லர்களே இல்லாத அல்லது பில்லர்கள் தேவைப்படாத ஸ்டீல் பாலத்தை பாதசாரிகளும், சைக்கிள் ஓட்டிகளும் கடப்பதற்காக உருவாக்கியிருக்கிறார்கள்.
மொத்த எடையும் இரு கரைகளில் மட்டுமே தாங்கும்படி இந்த பாதசாரிகளுக்கான பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 8மீ அகலம் உடைய இந்த பாலத்தின் மொத்த நீளம் 126மீ ஆகும். ஆற்றின் நீர்பரப்பிலிருந்து 5.85மீ உயரத்தில் இருக்கும்படி பாலத்தை அமைத்திருக்கிறார்கள்.
சைக்கிள் செல்ல 2.5மீ இடமும், 3.7மீ பாதசாரிகள் கடந்து செல்லவும் ஒதுக்கியிருக்கிறார்கள்.
தாங்கு தூண்கள் இல்லாமல் இப்படி ஒரு நீளமான பாலத்தை கனடாவில் உருவாக்கியிருப்பது அஷீவார்ந்த கட்டிடக்கலை அதிசயமாகவே பார்க்கப்படுவதால் உலகின் சிறந்த பாதசாரிகளுக்கான முதல் 10 பாலங்களில் இதுவும் இடம்பெற்றிருக்கிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066668
|