அபார்ட்மென்டுகளின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?

21 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:06 PM


சற்றே யோசித்துப் பாருங்கள். நாம் வாங்கும் எல்லா பொருட்களுக்கும், மின்சாதனங்களுக்கும் எத்தனை வருடம் உத்தரவாதம் என்ற கேள்வியை முன் வைக்கிறோம். ஆனால், நமது காலத்திற்குப் பிறகும் வரக்கூடிய தலைமுறைகள் வாழ இருக்கும் வீடுகளுக்கு எத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் என கேட்டு வாங்குகிறோமா? அல்லது நாங்கள் கட்டித் தரும் வீட்டிற்கு இத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் தருகிறேன் என யாராவது சொல்கிறார்களா?

 

தனி வீடு, ஃப்ளாட் என இருவகை வீடுகளில் எது சிறந்தது என்கிற கேள்வி காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆனால், இந்த இரண்டு வகை வீடுகளுக்கும் ஆயுள் எத்தனைக் காலம் என்கிற ஆய்வில் நமது கட்டுமானத்துறையினர் ஏனோ சென்ற
தில்லை. அணைகள், பாலங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களுக்கு வேண்டுமெனில், 100 வருடம், 150 வருடம் நிலைத்து நிற்கக்கூடியது என உறுதி கூறலாம். ஆனால், வீடுகளுக்கு?

 

மக்கள் வாழக்கூடிய குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது ஆயுட்காலம் இருத்தல் அவசியம். ஆனால், தனி வீடுகளின் ஆயுட்காலம் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருப்பதாலும், அவ்வப்போது இடித்து, மாற்றி மறுசீரமைத்துக் கொண்டிருப்பதாலும், சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்துக் கொண்டிருப்பதாலும், தனி வீட்டின் ஆயுள் அவ்வப்போது நீடித்துக் கொண்டே இருக்கிறது. நம் வீடுதானே, எப்போது வேண்டுமானாலும் இடித்துக் கட்டிக் கொள்eலாம், என்றும், வருகிற புதிய தலைமுறைகளின் சிந்தனைக்கேற்ப வீட்டின் வடிவத்தை மாற்றிக் கொள்eலாம் என்கிற நமது மனோபாவம் ஒரு காரணம்.

 

ஆனால், அபார்ட்மென்டுகள் அப்படி அல்ல. ஃப்ளாட்டை வாங்கிய பிறகு, நம் வீட்டின் வயதுதான் பக்கத்து வீட்டின் வயதாகும். எனது ஃப்ளாட் மட்டும் பழசானது என யாரும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த கட்டிடமே சிதிலமடைந்தது என்றாலும், நமது இஷ்டப்படி மறுசீரமைக்க முடியாது. அதனால்தான் தனி வீட்டை விட அபார்ட்மென்டுகளின் ஆயுட்காலம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், அதிக உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

 

சென்னை அண்ணா சாலையில் ஒரு பிரபல நிறுவனத்தால் கட்டப்பட்ட ஒரு குடியிருப்பு வளாகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவான தனியார் அடுக்கு
மாடிக்குடியிருப்பாகும். 1984- ல் கட்டப்பட்ட அந்த அடுக்கு மாடியின் வயது 29 ஆண்டுகளாகும். அதற்குப் பிறகு, ஏராeமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. 1990க்குப் பிறகு முழுவீச்சில் தமிழகக் கட்டுமானத்துறை விசுவரூபம் பெற்றது.

 

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விrயம் எனில், இதுவரை தமிழ்நாட்டில் கட்டப்பட்ட எந்த தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகவில்லை என்பதுதான். இதுவரை கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிகள் மற்றும் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்கு
மாடிகள் ஆகியவற்றில் எத்தனை அபார்ட்மென்டுகள் 50 ஆண்டுகள் தாண்டி உறுதியுடன் நிற்கும் என்பது பலரும் யோசிக்காத ஒரு கோணம்.

 

அபார்ட்மென்டுகளின் ஆயுள் பற்றி வரையறையை கேட்டறிவதற்காக முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி அவர்களை அணுகினோம்.

 

“ரீ இன்ஃபோர்ஸ்டு கான்க்ரீட் ஸ்ட்ரக்சரால் உருவாக்கப்படும் எல்லா கட்டுமானங்களுக்கும் 50 ஆண்டுகள் என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. சென்ட்ரல் பப்ளிக் வொர்க் டிபார்ட்மெண்டின் கெயிட்லைனில் ஆர்.சி.சி. ஸ்ட்ரக்சரில் உருவாக்கப்படும் கட்டுமானங்களுக்கு அதே போல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அபார்ட்மெண்டு களுக்கும் ஃபிளாட்டுகளுக்கும் பொருந்தும்.
ஒரு கட்டிடம் எப்போது பழுதாகிறது என்றால் அதன் கட்டுமான முறைகளில் தவறுகள் ஏற்படும்போது தான் என சொல்ல வேண்டும். கான்க்ரீட் பணிகளின்போது அதை சரியான விகிதத்தில் கலந்து நன்றாக வைப்ரேrன்‘ செய்ய வேண்டும். சரியாக வைப்ரேஷன் செய்யாத போது அந்த கட்டுமானத்தில் RUST ஏற்பட்டு விடுகிறது. இதனால் அட்மாஸ்பியரில் உள்ள ஆக்சிஜன் உள்ளே சென்று கட்டுமானத்தில் உள்ள கம்பிகளுடன் கலந்து கரோசன் ஏற்பட்டு விடுகிறது இவ்வாறு கரோசன் ஏற்படும்போது கம்பிகளானது அதன் வடிவத்தில் இருந்து ஏழு மடங்கு பெருத்துவிடுகிறது.இதனால் கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்துவிடும். 5 ஆண்டுகளில் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படும். 10 ஆண்டுகளில் அந்த கட்டிடம் முழுவதுமாக சிதிலம் அடைந்துவிடும். பீம்கள், காலம்கள், கட்டுமானங்களுடன் இணையும் ஜங்rன் பகுதிகளில் ஜாயிண்ட் ரிங்குகளின் டயா 10 துது மற்றும் அதற்கும் அதிகமான டயாக்களை உள்ள கம்பிகளை பயன்படுத்தினால் ஜாயிண்ட் ஜங்ஷன்கள் வலுவானதாக அமையும். குறைந்த துது டயாக்களை உள்ள கம்பிகளை பயன்படுத்தினாலும் அந்த கட்டிடத்தின் வலிமை குறைந்தே இருக்கும். அதனால் அதன் ஆயுளும் குறைந்து விடும்.

 

இது தவிர அபார்ட்மெண்டின் தரம் என்பது கட்டுமானப் பொருட்களின் தரத்தைப் பொறுத்தும்

அமைகிறது.கட்டுமானப் பொருட்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுதல் வேண்டும். கட்டுமானங்களுக்கு பயன்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது தரமான பொருளா ? அது ணூறீநு தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம் தயாரித்த பொருளா? என்று கண்டறிந்து தரமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.அந்த தரமான பொருட்களை சிறந்த தொழிற்நுட்பப் பணியாளர்களை கொண்டு அந்த கட்டு
மானப் பணியை முடித்திட வேண்டும். அவ்வாஷீல்லாமல் குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று அவர்களை பயன்படுத்துதல் கூடாது.”

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் கட்டப்படும் ஃபிளாட்டுகளுக்கு ஆயுட்காலம் என்னவாக இருக்கிறது ?
“அங்கு கட்டப்படும் ஃபிளாட்டுகளை அந்த நாடுகளில் உள்ள ஹவுசிங் போர்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வுகளை மேற் கொள்கிறது. அதன்பிறகு அந்த கட்டு
மானங்களில் உள்ள பழுதுகள் உடனடியாக சரிசெய்யப்படுகிறது. பிறகு ஹவுசிங் போர்டால் தரச்சான்று வழங்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு கட்டிடங்களின் வயதும் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலநடுக்கங்களை தாங்க கூடிய வலிமையுடைய கம்பிகள் கொண்டு கான்கீரீட்டுகளை அமைக்கிறார்கள். அத்துடன் சிறந்த தொழிற்நுட்ப பணியாளர்களைக் கொண்டு பணிகள் முடிக்கப்படுவதால் அங்கு உள்ள கட்டிடங்கள் நீண்ட ஆயுளுடன் நிலைப்பெற்று இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் நிலைமை தலைகீழ். அரசும் மெத்தன
மாக இருக்கிறது. மக்களுக்கும் கட்டுமானங்களைப் பற்றிய விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை” என்றார்.

 

அபார்ட்மென்டுகளின் ஆயுள் பற்றி நாம் கவலைப் படுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டியிருக்கும் குடியிருப்புகளின் இன்றைய நிலையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டுமானத்தில் நுழையாத காலகட்டத்தில் அரசு குடியிருப்புகள்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டன.ஜி+4 குடியிருப்பு வகைகளான இவை நிறைய இடங்களில் சிதிலமடைந்து, ஆட்கள் தங்குவதற்கு லாயக்கற்ற வீடுகளாக அறிவிக்கப்பட்டு, அந்த மக்களுக்கு புதிய வீடுகளை கட்டி தந்து கொண்டிருக்கின்றனர். 40 ஆண்டு கால ஆயுளை தாக்குப் பிடிக்காத அரசு குடியிருப்புகளை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது உண்மைதான். தரமற்ற கட்டிடப் பொருட்கள், முறையற்ற கட்டுமானமுறைகள், ஊழல் கான்ட்ராக்டர்கள், இவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் கட்டிடங்கள் 40 ஆண்டுகள் இருந்ததுகூட பெரிய விrயம்தான்.

 

நமது கட்டுநர்கள் கட்டித்தரும் வீடுகளில் தரம் குறித்து நாம் குறை சொல்வதற்கு ஏதுமில்லை. ஸ்ட்ரக்சுரல் வடிவமைப்பு, மண் பரிசோதனை, தரமான கட்டிடப் பொருட்கள், முறையான கட்டுமான முறைகள், இவற்றின் மூலமே தங்கeது புராஜெக்டுகளை உருவாக்குகிறார்கள் என்றாலும், நாங்கள் தரும் வீட்டிற்கு இத்தனை வருடம் உத்தரவாதம் தருகிறோம் என நம்பிக்கை அளித்தால், அதை மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்பார்கள் அல்லவா? நிச்சயம் அந்த மாற்றம் வரும் என நம்புகிறோம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066676