முத்திரை பதிக்கும் ஸ்டாம்ப்ட் கான்கிரீட்

23 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:07 PM


கான்கிரீட் உற்பத்தியில் புதிய தொழிற்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதன் மூலமே அதன் தேவையின் தன்மையை அறிந்துக் கொள்ளலாம். வெறும் சிமெண்ட் கலவை மட்டுமின்றி மற்ற வகை கலவைகளாலும் கான்கிரீட்கள் உடனடியாதயாரிக்கப்படுகின்றன.கட்டு
மானத்தின் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பும் கான்கிரீட்டைச் சார்ந்தது என்பதால் இதன் பல்வேறு தொழிற்நுட்பத் தேவைகள் கட்டாயமாகி விட்டன. கான்கிரீட்டிற்கு பலம் சேர்க்க ஸ்டீல் மட்டுமே இருந்த காலம் இன்று மாறி விட்டது. ரசாயன நாரிழைகள் சேர்க்கப்பட்டு கான்கிரீட்டிற்கு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது.

 

கான்கிரீட் தரத்தின் முக்கிய அம்சங்களாக செயல்பாட்டுதிறன், இறுக்க பலம், தொகுப்பு வடிவம் மற்றும் நீண்டு உழைக்கும் தன்மை ஆகியவை கருதப்பட்டன. கான்கிரீட் கலவையை கையால் செய்த காலம் மாறி, இயந்திரமயமாகி விட்டது. இப்போது அதனையும் தாண்டி ‘கான்கிரீட் பிளாக்’குகள் பல வடிவங்களில் நவீன காலத்தேவையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒருவகைதான் ஸ்டாம்ப்டு கான்கிரீட்.தரையில் நெருக்கமாக பதிக்கக்கூடிய வண்ணமயமான வடிவங்களுடன் வெளிவரும் ‘ஸ்டாம்ப்டு’ கான்கிரீட் ‘பிளாக்’ குகள், தரைதள கான்கிரீட் மீது பதிக்கக்கூடியவைகளாக வெளி வந்துள்ளன. தரைதள கான்கிரீட் முழுவதுமாக காய்வதற்குள் பதிக்கப்பட வேண்டியவை இவை. இது மற்ற வகையினங்களான டைல்ஸ், மரப்பலகை மற்றும் பதிக்கும் செங்கல் ‘பிளாக்’குகளை விட சிறந்தவை என்று கட்டுநர்களால் கூறப்படுபவை.

 

ஸ்டாம்ப்டு கான்கிரீட்டின் நன்மைகள்:
* குறிப்பிட்ட முத்திரை ஏதேனும் பதிக்க வேண்டியிருந்தால், பணி ஆணையின் போதே குறிப்பிட்டால் அம்முத்திரையையும் பதிக்கச் செய்து தருகிறார்கள்.

 

* இரவு நேர போக்குவரத்து மற்றும் அதிக வெப்ப, குளிர் மற்றும் மழை போன்ற தட்ப வெப்ப மாற்றங்களை தாங்கக் கூடியவை.

 

* அதிக தண்ணீர் பரவும் பட்சத்திலும் தரை தளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலான ‘பிளாக்’குகள் இவை.

 

* இது எவ்வித தரைதளத்திலும் பதிக்கக் கூடியவை. பல நூறு ஆண்டுகள் நீடித்து உழைக்கக் கூடியவை.


எங்கு பயன்படுத்தலாம்?

பள்ளி, கல்லூரிகள், தீம்பார்க், மால்கள், உணவகங்கள், நட்சத்திர ஒட்டல்கள், நடைபாதை பிளாட்பாரங்கள், நூலகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியன வற்றுடன் நீச்சல் குளத்தை சுற்றியுள்ள பகுதிகள், பழங்கால சின்னங்களாக விளங்கும் இடங்களிலும் பதிக்கப்படும் போது அப்பகுதிகள் கூடுதல் மெருகேறுகின்றன. விரைவில் ஸ்டாம்ப்டு கான்கிரீட். கட்டுமானத்துறையில் தனி முத்திரை பதிக்கக் காத்திருக்கிறது.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067391