வீட்டுத் தோட்டத்தில் ரயில்

23 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:08 PM


வாழ்நாள் முழுதும் உழைத்துக் களைத்த ரிட்டையர்டு ஆன சீனியர்கள் வீட்டில் என்ன செய்வார்கள்? பேப்பர் படிப்பார்கள். டிவி பார்ப்பார்கள். முடிந்தால் காலாற நடப்பார்கள். அதிகபட்சம் அதிகாலை எழுந்து ஆவின் பால்பூத்
திற்குச் செல்வார்கள்.

 

ஆனால், இங்கிலாந்தில் 80 வயது சீனியர் சிட்டிசன் ஒருவர், பொழுது போகாமல் தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் தண்டவாளம் அமைத்து, குட்டி ரயிலில் தினமும் ஜாலியாக ஒரு ரவுண்டு வருகிறார்.

 

இங்கிலாந்தின் ஷார்ப்ஷயர் பகுதியில் பிரிட்ஜ்நார்த் என்ற இடத்தை சேர்ந்த தாத்தா பில் பேரிட் (80). தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வீட்டில் தற்போது ‘அக்கடா’ என்று இருக்கிறார்.


பள்ளிப் பருவத்தில் இருந்தே, ரயிலில் போவது என்றால் இவருக்கு அலாதி ஆசை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரயில் பயணம் செய்வார். ரிட்டயர் ஆன பிறகும், அவ்வப்போது போய் வந்தார். தற்போது தள்ளாத வயது என்பதால், ‘பயணங்கள் இவரால் முடிவதில்லை’. இதனால் தீவிரமாக யோசித்த பேரிட் தன் வீட்டை சுற்றியுள்ள 13 ஏக்கர் தோட்டத்தில் தண்டவாளம் அமைத்தார். 25 அடி நீளமுள்ள குட்டியூண்டு ரயிலை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார்.

 

3 ஆண்டு தீவிரமாக உழைத்து, தோட்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு தண்டவாளம் அமைத்திருக்கிறார். இதற்காக ரூ.19 லட்சம் செலவு செய்திருக்கிறார்.

 

தினமும் தனது ரயிலில் ஏறி தோட்டத்தை ரவுண்டு அடித்து வருகிறார். “என் ரயில் ஒரு போதும் லேட்டாக வந்ததில்லை” என்று சொல்லி சிரிக்கிறார் மினி ரயில்வேக்கு சொந்தக்காரரான தாத்தா.

 

இந்த மினிரயிலைப் பற்றி கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து வாண்டுகள் இதில் பயணம் செய்ய ஆசைப்பட அரசு அனுமதி பெற்று, அதற்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டார். விரைவில் இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக்கவும் இருக்கிறார். 2015- க்குள் அந்தக் கனவு நிச்சயம் நிறைவேறும் என்கிறார் இந்த இளைஞர்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067346