நட்டநடு நெடுஞ்சாலையில் 5 மாடி வீடு

23 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:09 PM


அரசு திட்டமிடும் அணைகள், பாலங்கள், சாலை போன்ற விரிவாக்கப் பணிகளின்போது நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டால் போர்க்கொடி உயர்த்துவது நமது ஊரில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிறது. சீனாவில் வாத்துப் பண்ணை நடத்தி வந்த ஒரு வயதான தம்பதியருக்குச் சொந்தமான 5 மாடி வீடு ஒன்று ஸியாங்ஸாங் என்னும் கிராமத்தில் இருந்தது. அந்த வழியே 200 அடி நெடுஞ்சாலை ஒன்றை உருவாக்குவதற்கான திட்டம் 2008 முதல் துவங்கப்பட்டது. அதன் வழியே இருந்த எல்லா நிலங்களையும் ஏறக்குறைய சீன அரசு விலை கொடுத்து வாங்கி ஆக்கிரமித்துக் கொண்டது.

 

ஆனால், வாத்துப் பண்ணைக்காரரான ‘லூ’ என்பவர் மட்டும் தனது வீட்டை அரசுக்குக் கொடுக்க விரும்பவில்லை. அதற்காக அவர் கேட்ட தொகையும் எக்கச்சக்கமாக இருந்தது.

 

அந்த கிராமத்தின் லோக்கல் நிர்வாகமும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கவே, நெடுஞ்சாலைத்தறை அவரது வீட்டை மட்டும் விட்டு சுற்றிலும் சாலைகளைப் போட்டுக் கொண்டே சென்று விட்டது. வித்தியாசமாக இருந்த இந்த நட்டநடு நெடுஞ்சாலை வீட்டினை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் உள்ள பல்வேறு வகையான சமூக வலைதளங்களில் குறும்புக்காரர்கள் போட்டுவிட, லூவும் இந்த வீடும் ரொம்பவே பிரபலமடைந்துவிட்டனர்.

 

கடைசியாக, அரசின் நிர்ப்பந்தத்திற்கும், பலரின் ஏச்சுக்கும் ஆளான லூ, இறுதியாக 41,000 டாலர் (ரூ.22,50,000) வாங்கிக் கொண்டு வீட்டை இடிக்க ஓகே சொல்லி விட்டார். இந்த வீடு இடிக்கப்படும்வரை வீட்டிற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பினை துண்டிக்கவே இல்லையாம் லோக்கல் நகராட்சி. இதுவே நம்மூராக இருந்தால்?

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067399