ப்ரீ ஃபேப் கட்டுமானம் பிரச்சினைக்குரியதா?
உலகெங்கும் பெருத்த வரவேற்பு பெற்ற, நம் நாட்டிலும் பரவலாக கடைபிடிக்கப்படுகிற ஒரு நவீன கால கட்டு
மானத்துறை தொழிற்நுட்பம்தான் ப்ரீகேஸ்ட் என்கிற ப்ரீஃபேப் கட்டுமானம். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் மிக எளிதில் பொருத்துதல், குறுகிய காலத்தில் கட்டுமானத்தை முடிப்பதில் ‘ப்ரீஃபேப்’ ஸ்ட்ரக்ச்சர்கள் சிறந்தவை என்பது மறுப்பதற்கில்லை.
அதனால்தான் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 90 சதவீதத்திற்கு மேல் ப்ரீகேஸ்ட் கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. மேற்கூறிய நாடுகள் மற்றும் பல்வேறு வளர்ந்த நாடுகளில் ப்ரீகேஸ்ட் தொழிற்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அவர்கள் செலவைப் பற்றிக் கவலையே படுவதில்லை.அவர்களுக்குத் தேவை மிகக் குறைவான கால அளவு மற்றும் மிகமிகக் குறைவாமனித உழைப்பு. ப்ரீகேஸ்ட் கட்டுமானம் இந்த இரு எதிர்பார்ப்புகளையும் பெருமளவில் பூர்த்தி செய்வதால் மேல் நாடுகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஆனால், இந்தியா போன்ற மனிதவளம் மிகுந்த நாடுகளில் கரன்சிதான் முக்கியம். எத்தனை காலமானாலும் காத்திருக்கத் தயார். சாதாரணமான கட்டுமானப் பணியாளர்களை வைத்து இருமாத காலம் நடக்கிற ஒரு வேலை இரண்டே வாரங்களில் ப்ரீகேஸ்ட் கட்டுமானம் முடித்துத் தரும் என்றாலும், செலவுதான் நம்மை யோசிக்க வைக்கிறது. அதிலும் ப்ரீஃபேப் கட்டுமானத்தைப் பொறுத்தவரை, அதன் உருவாக்க செலவைவிட போக்குவரத்துச் செலவுதான் கட்டுநரை மிரள வைக்கிறது.
கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு பிரம்
மாண்ட ஸ்ட்ரக்சர்களைக் கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு, கட்டுமானச் செலவின் மொத்த அளவில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்க வேண்டியது அவசியமாகும். இந்த செலவு சற்று அதிகமா? என்று கேட்டால், பெரும்பாலனவர்களிடம் இருந்து வரும் பதில் ‘ஆம்’ என்பதே. ஆனால் புராஜெக்டின் அளவு மற்றும் கட்டுமான இடத்திற்கும், ப்ரீஃபேப் தொழிலகத்திற்கும் இடையிலான தூரம்தான் இதனை நிர்ணயிக்கிறது.
ப்ரீஃபேப் கட்டுமான பாகங்களின் அளவுகளும், இரண்டு இடங்களிலும் தேவையான ‘லேபர் காஸ்ட்’ ஆகியனவும் போக்குவரத்து செலவின் தாக்கத்தை நிர்ணயிக்கும் மற்ற பிற அம்சங்களாகும். ப்ரீஃபேப் தொழிற்நுட்பம் அறிமுகமாகும் நிலையிலேயே அதன் போக்குவரத்து செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்றாலும் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு, ப்ரீஃபேப் உருவாகும் தொழிலகத்திற்கும் இடையிலான தூரம்தான் செலவு அளவை நிர்ணயிக்கும் என்பது கண்டறியப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
அதேநேரம் கட்டுமானத்தில் ப்ரீஃபேப் கட்டமைப்பின், அளவு எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக போகிறதோ அதனைச் சார்ந்தே போக்குவரத்து செலவும் அதிகமாகும் என்பது இந்த தொழிற்நுட்பம் நடைமுறைக்கு வந்த பின்தான் கட்டுநர்களால் கணக்கிட முடிகிறது. ‘ப்ரீஃபேப்’ என்பது பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டுமானம் ஆகும். ஆக பாகங்களின் அளவு, எடை போன்ற அம்சங்களை பொறுத்தும் போக்குவரத்து செலவு மாறுபடும் என்பது மறுக்க முடியாத உண்மை. மொத்த கட்டுமானப்பணி அது தயாராகும் இடத்திலேயே நடைபெறும் பட்சத்தில், கட்டுமானத்திற்கு தேவையான இடுபொருட்களை கொண்டு வருவது, தேவையான இயந்திர பயன்பாட்டுக்காக அவற்றை கனரக வாகனத்தில் கொண்டு வருவது போன்ற செலவினம் இருக்கத்தான் செய்தது.
அதிலும் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி என்ற தொழிலாளர்கள் சார்ந்த அம்சமும் இடம்பெறத்தான் செய்தது. கட்டுமானத்துக்கு தேவையான பெரியபொருட்களுக்கு தனிக்கூலி நிர்ணயித்து வசூலிப்பதில்லை. ‘ப்ரீஃபேப்’ ஸ்ட்ரக்சர் உருவாக்கத்திலும் ஸ்ட்ரக்சர் பாகங்களை ஏற்றிக் கொண்டு கட்டுமான இடத்திற்கு செல்லும் போக்குவரத்து செலவு உள்ளதுதான். இதில் தட்பவெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப அப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாப்பது அவசியம்.
ஆக, ஒரு ப்ரீகேஸ்ட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், ப்ரீகேஸ்ட் உருவாக்கச் செலவு அதை பணியிடத்திற்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு, கையாளுவதற்கான கூலி, பாதுகாப்பதற்கானசெலவு,கிரேன் போன்ற இயந்திரங்களின் வாடகை போன்ற பல்வேறு வகையான செலவுகளை கட்டுநர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெகு சீக்கிரம் கட்டுமானப்பணி முடிவதானால் ஏற்படுகிற லாபம் என்பது ப்ரீகேஸ்ட் தொழிற்நுட்பத்தைப் பயன் படுத்துவதால் ஏற்படுகிற செலவை விட அதிகம் எனும் போது, ப்ரீகேஸ்ட் நமக்குப் பிரச்சனையாக இருக்காது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067352
|