11 மாடி குடியிருப்பு கட்டடம்

21 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:19 PM


சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி குடியிருப்பு கட்டடம், 2014 ஜூன், 28ல் இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர். இந்த வளாகத்தில் எஞ்சியுள்ள, 'ஏ பிளாக்' கட்டடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.


இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இக்கட்டடத்தை இடிக்கலாம் என, மே, 12ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கட்டடத்தை வெடி வைத்து தகர்க்கும் பணிக்கு, திருப்பூரை சேர்ந்த, 'மேக்லிங் இன்ப்ராஸ்ட்ரக்சர் புராஜக்ட்' நிறுவனத்தை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., தேர்வு செய்தது.

 

இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொன்லிங்கம், தாம்பரம் கோட்டாட்சியரை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

* பேட்டிபின், பொன்லிங்கம் கூறியதாவது:

உயரமான கட்டடங்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெடி வைத்து தகர்க்கும் பணியில், 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். இந்த அடிப்படையில், மவுலிவாக்கம் கட்டடத்தை இடிக்கும் பொறுப்பு, எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வெடி மருந்துகளை பயன்படுத்தி, 'இம்ப்ளோஷன்' எனப்படும், உள் வெடிப்பு முறையில் இக்கட்டடம் தகர்க்கப்படும். இப்பணி, 10 நொடிகளில் முடிக்கப்பட்டுவிடும்.

 

அதற்கு முன், கட்டடம் அமைந்துள்ள பகுதியில், 50 மீட்டர் சுற்றளவுக்கு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன், கட்டடத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெடி மருந்துகளை வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.கட்டடம் தகர்க்கப்படும் நாளில், சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர்; போக்குவரத்து நிறுத்தப்படும்.இதற்கான அணுகுமுறைகள் குறித்து கோட்டாட்சியரிடம்ஆலோசனை மேற்கொண்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

 

ஓரிரு நாளில் ஒப்படைப்பு!
இடிக்கப்படவுள்ள கட்டடம், ஓரிரு நாட்களில் இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

 

திருப்பூர் மேக்லிங்க் நிறுவன நிர்வாகி, தாம்பரம் கோட்டாட்சியரை நேற்று சந்தித்த போது, கட்டடம் அமைந்துள்ள வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், அதில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி கோரினார். அதன்படி இக்கட்டடம், ஓரிரு நாளில் ஒப்படைக்கப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தகர்ப்பது எப்படி; வரைவு திட்டம் ரெடி!

கட்டடத்தை வெடி வைத்து தகர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள வரைவு திட்டம்:

* மொத்தம், 11 தளங்கள் உள்ள அந்த கட்டடத்தின் மூன்று மற்றும் நான்காவது தளங்களின் துாண்கள் மற்றும் பீம்களில் வெடி மருந்துகள் வைக்கப்படும்

 

* துாண்கள் மற்றும் பீம்களின் தடிமன், உயரம் அடிப்படையில் வெடி மருந்தின் அளவு முடிவு செய்யப்படும்


* அனைத்து பக்கத்திலும் வெடிமருந்து வைக்கப்பட்டாலும், எந்த இடத்தில் முதலில் வெடிக்கிறதோ அந்த பக்கம் நோக்கியே ஒட்டுமொத்த கட்டடமும் சரியும்


* 'பி பிளாக்' கட்டடம் இடிந்த பகுதி காலியாக இருப்பதால் அந்தபக்கம் நோக்கி, ஒட்டுமொத்த கட்டடமும் சரியும் வகையில் வெடி மருந்துகள் வைக்கப்படும்


* மின்சாரத்தை பயன்படுத்தி வெடிக்க வைப்பதால், சில வினாடிகளிலேயே கட்டடம் தரைமட்டமாகிவிடும்


* இது போன்ற நிகழ்வுகளில், மிக அதிகளவில் துாசி கிளம்பும்; அதிர்வுகளால் பக்கத்தில் உள்ள வலு குறைந்த கட்டடங்கள் சரியவும் வாய்ப்புள்ளது. எனவே, அக்கம் பக்கத்தில், 500 மீட்டர் வரை ஆள் நடமாட்டம் இல்லாத அளவுக்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பிறகே இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்


* அரசு குறிப்பிடும் நாளில், காலை நேரத்தில் இடிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இடிப்பு செலவு உயர்வு!

மவுலிவாக்கம், 'ஏ பிளாக்' கட்டடத்தை தகர்க்க, திருப்பூரை சேர்ந்த நிறுவனம், சில மாதங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டது. அப்போது, இடிப்பு பணிக்கு, 46.80 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின், வழக்கு விசாரணை தாமதத்தால், ஒப்பந்த தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்தது. தற்போதைய நிலவரப்படி, கட்டடத்தை இடிப்பதற்கான தொகை, 49.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வதந்தியால் பரபரப்பு!

மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிக்கப்பட்டு, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று காலையில், மவுலிவாக்கத்தில் எஞ்சி உள்ள, ஏ பிளாக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவக்கப்பட்டது என தகவல் பரவியது.கட்டடம் இடிந்து விழுந்த அதே நாளில், இடிப்பு பணியை அதிகாரிகள் மேற்கொள்வரா என விசாரித்த போது, அந்த தகவல் வதந்தி என்றும், இடிப்பு தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வருவதாகவும்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066646