ஜல்லி செலவு குறைய..
03 டிசம்பர் 2020   01:01 PM



இன்றைய சூழலில் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் ஜல்லிகளை எடுப்பதால், இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து விட்டன. இதனால், ஜல்லிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி உள்ளது. இதற்காக, பசுமைக் கட்டுமானங்களுக்கான வல்லுனர்கள், பல்வேறு மாற்றுப் பொருட்களை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இந்தப் பொருட்கள் கருங்கல் ஜல்லிகளுக்கு இணையாக, மக்களிடம் ஆதரவை பெறவில்லை.


கருங்கல் ஜல்லிகளுக்கு   மாற்றாக பரிந்துரைக்கப்படும், உடைந்த கிரானைட் துண்டுகள், டயர் துண்டுகள், பிளாஸ்ட்டிக் துண்டுகள், பழைய கட்டட இடிப்பில் கிடைக்கும் கற்கள், மர துண்டுகள் போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்தலாம்.


இதை முழுமையாகப் பயன்படுத்தாவிட்டாலும், கட்டுமானப் பணியில் ஜல்லி தேவையில் 50 சதவீத அளவுக்காவது பயன்படுத்தலாம். இதனால், ஜல்லிகளின் தேவை குறைவதுடன், சுற்றுச்சுழலும் பாதுகாக்கப்படும். மேலும், கருங்கல் ஜல்லிக்கு ஆகும் செலவும் குறைக்கப்படும்.


மொத்தத் தேவையில், 50 சதவீதத்தைக் குறைப்பதால், ஒரு கன மீட்டர் பணியின் செலவில், 400 ரூபாய் வரை மிச்சமாகும் என்று கூறப்படுகிறது. இதே நிலையில், 100 கன மீட்டர் அளவுக்கான கட்டடத்தில், 40 ஆயிரம் ரூபாய் வரை, மிச்சமாகும் 


உங்கள் கவனத்திற்கு...
1. ஸ்லாப் அமைப்பதற்கு பதில் ரெடிமேட் ஸ்லாப், மேற்கூரை, ஜாக் ஆர்ச், பில்லர் ஸ்லாப் போன்றவற்றை பயன்படுத்தி கான்கிரீட்டின் பயன்பாட்டை குறைக்கலாம்.
2. சுவர்கள் அமைப்பதற்கு பதில் ஜல்லி கலந்த எலிப்பொறி தொழில்நுட்பத்தை கையாளலம்
3. செலவைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சிமென்ட் கம்பி ஜல்லி மணல் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரத்தில் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது
4. புதிய தொழில் நுட்பங்களில் தற்போது குறிப்பிடத்தக்கதாக இருப்பது செயற்கை ஜல்லி என்றழைக் கப்படும் லேகா களிமண் உருண்டைகள். (லைட் எக்ஸ் பாண்ட்டு கிளே அக்ரிகேட்ஸ்) இதெல்லாம் பயன்படுத்தி ஜல்லி செலவை கில்லி போல குறைக்கலாம்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1970258