எங்களைப் பற்றி ..

பிராம்ப்ட் பதிப்பகம்

கட்டுமானத்துறைக்கென்று பத்திரிகை ஏதும் தமிழில் இல்லையே என்று எண்ணத்தின் விளைவாக பில்டர்ஸ்லைன் என்னும் கட்டுமானத்துறைக்கான இதழும் அதனை வெளியிடுவதற்கு பிராம்ப்ட் பதிப்பகம் என்னும் நிறுவனமும் திரு.ஏ.உதயகுமார் அவர்களது முயற்சியால் 2000 நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் செய்தித்தாள் வடிவாக வெளிவந்த  பில்டர்ஸ்லைன் கட்டுமானத்துறையினர் மற்றும் பொதுமக்களின் அமோக வரவெற்பின் காரணமாக மாத இதழ் வடிவதற்க்கு மெம்பட்டது. மேலும், கறுப்பு வெள்ளை தொற்றத்திலிருந்து 2010 முதல் முழு வண்ண மாத இதழாக தற்போது வரை மிடுக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பத்திரிகை மட்டும் அல்லாமல் கட்டுநர்கள், கான்ட்ராக்டர்கள், பொறியாளர்கள், ஆர்க்கிடெக்டுகள், சிவில் மாணவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான வீடு, மனை கட்டிடம் சார்ந்த புத்தங்களை தொடர்ச்சியாக பிராம்ப்ட் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. மேலும் எலிவேஷன், இன்டிரியர் வடிவமைப்பு மாதிரிகளை கொண்ட சி.டி.கள் மற்றும் ஆண்டுதோறும் சென்னை, கட்டுமானத்துறை டைரக்டரி (முகவரி களஞ்சியம்) ஆகியவற்றையும் பிராம்ப்ட் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

இது தவிர, பிராம்ப்ட் பதிப்பக குழுமத்தின் மற்றொரு நிறுவனமான பிராம்ப்ட் டிரெட் ஃபேர்ஸ் என்கிற நிறுவனம் ஆண்டுதோறும் சென்னை மற்றும் பெரு நகரங்களில் வீடு, மனை மற்றும் கட்டிடப் பொருட்களுக்கான கண்காட்சிகளை கடந்த எட்டு வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும் பிராப் ஷாப் என்கிற இன்னொரு துணை நிறுவனம் மனை, வீடு, ஃபிளாட்களை வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்குகிறது.

பிராம்ப்ட் குழுமத்தின் தலைமை இயக்குனரான திரு.ஏ.உதயகுமார் அவர்கள் பிராம்ப்ட் பதிப்பகத்தின் பதிப்பாளராகவும் பில்டர்ஸ்லைன் கட்டுமானத்துறை மாத இதழின் நிர்வாக ஆசிரியராகவும் செயல்பட, பில்டர்ஸ்லைன் ஆசிரியராக திரு.பா.சுப்ரமண்யம் அவர்களும் பொறுப்பாசிரியராக திரு.தஞ்சை ராஜா (கைபேசி : 88254 79234) அவர்களும் பொறுப்பு வகிக்கின்றனர்.

கட்டுமானத்துறையின் என்சைக்ளோபீடியா என கட்டுமானத்துறையினரால் பெரிதும் பாராட்டப்பெறும் நமது பில்டரஸ் லைன் மாத இதழ் தமிழின் முதன்மை மற்றும் முன்னணி மாத இதழாகும். நேரத்தை மிச்சப்படுத்தும் கட்டுமான தொழிற்நுட்பங்கள், அதி நவீன கட்டிட பொருட்கள். புதுவகை கட்டுமான முறைகள். கட்டுமானத்திற்கு வலுவூட்டும் ரசாயனங்கள், பேராசிரியர்கள் மற்றும் முனைவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள். அயல்நாட்டின் அதிசய கட்டுமானங்கள், ரியல் எஸ்டேட் தகவல்கள், இன்டிரியர் நுணுக்கங்கள், வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான சட்டங்கள். வாஸ்து தொடர்பான ஐயங்கள் போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியதாகும் நமது பில்டர்ஸ்லைன்.

அண்மையில் 13ம் ஆண்டு துவக்கவிழாவினை வெகு சிறப்பாக கொண்டாடிய நமது பில்டர்ஸ்லைனின் மொத்த சர்குலேஷன் 82,000. சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமானதாகும். தமிழ்நாடு முழுவதும் அணைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும் நமது பில்டர்ஸ்லைனுக்கு கட்டுமானத்துறையினர் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் வாசகர்களாக உள்ளனர். சந்தைக்கு புதுசு, வாசகர் கேள்வி-நிபுணர் பதில், தங்கச் சங்கங்கள், கட்டுமான மேலாண்மை தொடர், சுலபமாய் கட்டலாம் சொந்த வீடு, மாதம் தோறும் ஒரு கட்டிட வரைபடம், கட்டுமான பொருட்களின் விலை நிலவரம் ஆகிய பகுதிகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறவையாகும்.

பில்டர்ஸ்லைன் தனிப் பிரதி ரூ.30, ஆண்டு சந்தா ரூ.360, 5 ஆண்டு சந்தா ரூ.1600,

மேலும் விசாரணைகளுக்கு 88254 79234 எண்ணை அழைக்கவும்.

directory.php கட்டுமானத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடிய சென்னை கட்டுமானத்துறை முகவரி களஞ்சியம் ஒன்றை ( பில்டர்ஸ்லைன் டைரக்டரி ) பிராம்ப்ட் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2008, 2009, 2010, 2011, 2012-13 ஆகிய 5 பதிப்புகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறது. 6500 முதல் 7000 வரை முகவரிகள் அடங்கியுள்ள இந்த டைரக்டரி அகர வரிசைப்படி 160 பிரிவுகளையும் 250 பக்கங்களையும் உடையது.

இதில் கட்டுமானத்துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் முழு முகவரி தொலைபேசி எண், கைபேசி எண், மின்னஞ்சல், இணையதளம் மற்றும் தொடர்பு நபரின் விபரம் ஆகியவை அடங்கி இருப்பதால் அனைவருக்கும் ஏற்ற வழிகாட்டியாக பில்டர்ஸ்லைன் டைரக்டரி விளங்குகிறது.

இதன் தனிப்பிரதி ரூ.325 ஆகும். இதில் கட்டுமான தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் விபரங்களை இலவசமாக பதித்துக்கொள்ளும் சேவையும் உண்டு. ஆண்டுதோறும் 60,000 பிரதிகள் வரை அச்சிடப்படும் இந்த டைரக்டரியில் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் விளம்பரங்களை செய்து கொள்ளலாம்.

மேலும் விசாரணைகளுக்கு 88254 79234 எண்ணை அழைக்கவும்.

கட்டுமானத்துறையினருக்கு மட்டுமன்றி தாங்களாகவே முயன்று வீடு கட்டும் மக்களுக்கு உரிய ஆலோசனைகளையும், தகவல்களையும் அளிக்கும் கட்டுமான நூல்கள் தமிழில் பெருமளவில் கிடைப்பதில்லை. இக்குறையைப் போக்க பிராம்ப்ட் பதிப்பகம் அவ்வப்போது பல்வேறு தலைப்புகளில் கட்டுமானத்துறைசார்ந்த அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது.

கட்டுமானம், ரியல் எஸ்டேட், தொழிற்நுட்பம், மேலாண்மை, இன்டிரியர், சட்டம், வாஸ்து ஆகிய பல்வேறு துறைகளுக்கான நூல்களை வெளியிடும் ஒரே பதிப்பகமாக விளங்குவதால் கட்டுமானத்துறை நூற்களஞ்சியமாக பிராம்ப்ட் பதிப்பகம் திகழ்கிறது. எங்குமே காண கிடைக்காத அரிய தகவல்களை உள்ளடக்கிய பல நூல்களை பிராம்ப்ட் பதிப்பகம் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது.

வீடு கட்டலாம் வாங்க, சொத்துக்கள் வாங்கும் முன், கட்டுமானத்துறை பாதுகாப்பு, அஸ்திவாரம் அமைக்கும்போது, ரியல் எஸ்டேட் வழிகாட்டி, வீட்டு பராமரிப்பு, அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு, ஆர்கிடெக்சர் அதிசயங்கள், எலக்ட்ரிசியன் கையேடு, சட்டம் என்ன சொல்கிறது ?, எழில் கொஞ்சும் இன்டிரியர், வீட்டு தோட்டம், அர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் போன்ற நூல்கள் வாசகர்களால் பெரிதும் வரவேற்க்கப்படுபவையாகும்.

மேலும் விசாரணைகளுக்கு, 88254 79234 எண்ணை அழைக்கவும்.

கட்டுமானத்துறையினருக்கு மட்டுமன்றி தாங்களாகவே முயன்று வீடு கட்டும் மக்களுக்கு கட்டிட முகப்பு மற்றும் பிளான்களை சி.டி. வடிவில் தயாரித்து பிராம்ப்ட் பதிப்பகம் அளிக்கிறது.

அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட், டுப்ளக்ஸ் வில்லாக்கள் என பல்வேறு வகையில் 6 சி.டி.களும், இன்டிரியர் வடிவமைப்பிற்க்கு 3 சி.டி.களும் ஆக மொத்தம் 9 சி.டி.களை பிராம்ப்ட் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. ஒவ்வொரு எலிவேஷன் சி.டி.களும் 40 பிளான்கள் என மொத்தம் 6 சி.டி.களில் 240 பிளான்கள் அடங்கியுள்ளன. வேண்டிய நிறங்களில் எலிவேஷன்களை மாற்றி பார்க்கும் வசதி, 360 கோணத்தில் எலிவேஷனை பார்க்கும் வசதி, வேண்டிய எலிவேஷன் மற்றும் பிளான்களை பிரிண்ட் எடுக்கும் வசதி போன்றவை இதில் உள்ளன.மேலும், எலிவேஷன் சி.டி.யிலேயே ஒவ்வொரு பிளானுக்கும் உரிய பெட்ரூம், ஹால், கிச்சன் ஆகியவற்றிற்கான இன்டிரியர் மாதிரிகளும் அடங்கியுள்ளன. (இது தவிர தனியே இன்டிரியர் மாதிரிகள் அடங்கிய சி.டி.களும் உள்ளன)

இதில் எலிவேஷன் சி.டி.கள் தலா ரூ.750 மற்றும் இன்டிரியர் சி.டி.கள் தலா ரூ.250 என விற்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக வாங்கும்பொழுது ரூ.5250 க்கு பதிலாக ரூ.3999 செலுத்தினால் போதும்.

மேலும் விசாரணைகளுக்கு 88254 79234 எண்ணை அழைக்கவும்.

Total No.of Visitors : 1965808