அடுக்கு மாடி வீட்டில் தங்களுக்குரிய ஃபிளாட்டுகளை வாங்கும் போது ஆவணங்கள் போன்ற லீகல் விஷயங்களில் வாடிக்கையாளர்கள் தற்போது கவனமாக இருக்கிறார்கள். ஆனால், தாங்கள் வசிக்கப்போகும் வீட்டின் ஒவ்வொரு சதுர அங்குலமும் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்வதில் பெரும்பாலும் கோட்டைவிடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு கட்டிடப் பொருட்கள் மீதான பொது அறிவு இல்லாததே காரணம்.
பெரும்பாலும் வீடு வாங்குபவர்கள் வீட்டின் அமைவிடம், விலை, வடிவமைப்பு ஆகியவற்றுக்குக்கூட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், தங்கள் வீட்டின் கட்டுமானத்தின் தரத்தை அறிந்து கொள்வதிலும் அதே அளவு கவனத்தை செலுத்தவேண்டும்.
வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிக ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் வீடு அமைந்திருக்க வேண்டும். அடிக்கடி புனரமைப்பு வேலைகளுக்காக செலவு வைக்கக்கூடாது. வீட்டை விற்க முடிவு செய்தால் அதன் விலைமதிப்பு குறையக்கூடாது ஆகிய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமானால் வீடு வாங்கும் போது அதன் கட்டுமான தரத்தை அறிந்துகொள்வது அவசியமானது.
வீட்டின் தரத்தை அறிந்து கொள்வது அவசியமானது. வீட்டின் தரத்தை அறிந்துகொள்வதற்கான சில எளிமையான வழிமுறைகளை பார்ப்போம்..
பிராண்டு மதிப்பு ஒரு வீட்டை எந்த கட்டுமான நிறுவனம் கட்டியது என்பது அக்கட்டுமானத்தின் தரத்தை பற்றிய முக்கியமான அடையாளமாகும். முன்னனி கட்டுமான நிறுவனங்களின் வெற்றிக்கு அவை தரமான வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதும் ஒரு காரணமாகும். மேலும் முன்னணி நிறுவனங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதும் எளிதானதாக இருக்கும். அந்த நிறுவனங்கள் தங்கள் புரௌசரில் குறிப்பிட்ட பிராண்டட் பொருட்களையே பயன்படுத்தியிருக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடித்தளம்
வீட்டின் அடித்தளம்தான் அதன் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கிறது. ஆனால் ஒரு வீட்டின் அடித்தளம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தவுடன் தெரிந்துகொள்ள முடியாது. அதேநேரத்தில் அடித்தளம் சரியாக அமைக்கப்படவில்லை என்பதை சில அடையாளங்களைக் கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வெளிப்புற சுவர்களில் விரிசல்கள் இருந்தால் அடித்தளம் சரியாக அமைக்கப்படவில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் இதை துல்லியமாகச் சொல்வதற்கு சில ஸ்டரக்சுரல் வடிவமைப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.
வடிவமைப்பு
வீட்டை தரமான முறையில் கட்டுவதற்கு கவனம் எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் அதே கவனத்தை வீட்டை வடிவமைப்பதிலும் எடுத்துக் கொள்ளும். எனவே நல்ல வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரமாகக்கட்டப்பட்டிருக்கும் என்று நம்பலாம். என்றாலும், பார்த்தவுடன் கவரக்கூடிய வகையில் வடிவமைப்பு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி நமக்கு.
கதவு, ஜன்னல்கள்
தரமான கட்டுமானத்தை விரும்பும் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்ததாரர்களும் அதேதரத்தை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும். எனவே கதவு, ஜன்னல்களில் உள்ள பிரேம்கள், கைப்பிடிகள் ஆகியவை தரமாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.
லிப்ட் வசதி
லிப்ட் வசதி செய்யப்பட்டிருந்தால் அந்த லிப்ட் வசதியை பராமரிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிறுவனமும் பிரபலமானதுதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெயிண்டுகள்
சுவர்களிலும் மரங்களிலும் பூசப்படுகிற பெயிண்டுகள் வெறும் அழகிற்காக மட்டுமில்லை.வெப்பம், குளிர்ச்சி போன்ற காலநிலைகளிலிருந்து பாதுகாக்கவும்தான். எனவே, வீட்டின் உள்ளே சுவர்களில் பூசப்படுகிற வண்ணங்கள் தரமானவையா என்று பார்க்க வேண்டும்.
திறந்தவெளி இடங்கள்
கட்டுமானத்தை சுற்றி போதுமான அளவில் திறந்தவெளி அமைந்திருக்கிறது என்றால் தரமான முறையில் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று அடையாளம். குடியிருப்பில் நல்ல காற்றோட்ட வசதி அமைய வேண்டும் என்று திட்டமிட்டு கட்டுபவர் அக்குடியிருப்பை தரமாகவும் கட்டியிருப்பார் என்று நம்பலாம்.ஒரு வீட்டின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் என்ற கணிப்பே, வீட்டை மறுவிற்பனை செய்யும்போது விலையை தீர்மானிக்கிறது. எனவே, முதலீட்டு நோக்கத்தில் வீடு வாங்குபவர்கள் வீட்டின் கட்டுமானம் தரமானது தானா என்று உறுதிசெய்து கொள்வது முக்கியம்.
வாழ்த்துக்கள்!
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2063199
|