கான்கிரீட் க்யூரிங் என்பது கட்டுமானப் பொ றியாளர்களுக்கு எப்போதுமே அதிக சிரமம் தரும் வேலையாகத்தான் இருந்து வருகிறது. எனினும், இதிலுள்ள கஷ்டங்களைக் குறைக்க எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன.கான்கிரீட்டுக்கு வழக்கமான முறைகளில் நீராற்றும் வேலைகளைச் செய்யத் தேவையில்லாமல் நவீன முறைகளைப் பின்பற்ற நினைப்பவர்களுக்கு மெக் பாக்கெமி நிறுவனம் தயாரித்து அளிக்கும் எம்கோரில் என்கிற வேதியல் பொருள் சிறந்த தேர்வாக அமையும்.
இது அக்ரிலிக் அடிப்படையிலான படலம் ஒன்றை உருவாக்க உதவுகிறது.புதிதாக இடப்பட்ட கான்கிரீட்டின் மேல் இதனை ஒருமுறை அடித்துவிட்டால் போதும். பிரஷ் அல்லது ஸ்ப்ரே கொண்டு பரப்பலாம். எம்கோரில் உருவாக்கும் படலமானது, கான்கிரீட்டிலிருந்து தண்ணீர் ஆவியாகி வெளியே செல்வதைத் தடுக்கும் போர்வை போல் செயல்படுகிறது. இதனால் கான்கிரீட் விரைவில் உலர்ந்து போகாமல் காக்கப்படுகிறது.
வெடிப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கான்கிரீட் பக்குவமடைவதை உறுதி செய்கிறது.சிறிய பரப்புகள் என்றால் கைக் கருவிகளைக் கொண்டே எம்கோரிலை இடலாம். பெரிய பரப்புகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சாதனங்கள் தேவை. கான்கிரீட் இடும் வேலையைத் தொடர்ந்து உடனடியாகப் பூச்சு வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடிய வேலைகளுக்கு இது ஏற்றது. வழக்கமான சிமென்ட் இறுகும் வேகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. சுருக்கங்கள் இல்லாமல் செய்யும். வெடிப்புகளைத் தவிர்க்கும். தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ள இடங்களில் எம்கோரில் அத்தியா வசியமானதாகும்.
சூரிய வெப்பத்தைத் திருப்பி அனுப்பி, கான்கிரீட் குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். பூசப்பட்ட எம்கோரிலை அகற்றுவதற்குத் தேவை இல்லை. அப்படியே அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரலாம்.
சதுர மீட்டருக்கு 200 முதல் 250 கிராம் வரை எம்கோரில் தேவைப்படும். மெக் பாக்கெமி இந்தியா பி லிட் நிறுவனம் எம்கோரிலைத் தயாரித்து அளிக்கிறது. சாலைகள், பாலங்கள், பிரிகேஸ்ட் பொருட்கள் மற்றும் கட்டிடத்தின் அனைத்து பாகங்களுக்கும் எம்கோரில் மிகவும் ஏற்றது.கான்கிரீட் நீராற்றுவதற்கு
ஒரு ஷார்ட் கட் வழி!
MC-Bauchemie (India) Pvt. Limited
411 Arenja Corner, 4th Floor,
Sector-17,Vashi, Navi Mumbai- 400 703 , Samir Surlaker
info.india@mc-bauchemie.com
+91 22 27892856 , 27893870
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2063658
|