கான்கிரீட் இயந்திரங்களின் தயாரிப்பில் 83 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் தற்போது கட்டுமான கிரேன்கள் தயாரிப்பிலும் நுழைந்துள்ளது. அதன் முதல் தயாரிப்பு வகை ‘டவர் கிரேன்‘ ஆகும். XCM4 என்னும் பெயரில் 1.3டன் முதல் 5 டன் வரை பாரங்களைத் தூக்கக் கூடிய கிரேன்களை இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது. 35மீ உயரத்துக்கு அசராமல் இது தூக்கும். இதன் ரேடியஸ் எனப்படும் சுற்றளவு 24 மீ ஆகும்.
பணியிடத்தில் நிலவும் அதிக காற்று வீசக்கூடிய சூழ்நிலையை இது அசால்ட்டாக சமாளிக்கும். பாரங்களை,கான்கிரீட் உறுப்புகளை மட்டுமல்லாமல், டிராலிகள், சிய கட்டுமான இயந்திரங்கள், ஏணிகள், பெட்டிகள் போன்ற பலவிதமான செயல்பாடுகளும் இதில் முடியும் என்பதால் இது ஒரு மல்டி ஸ்பெrVலிட்டி டவர் கிரேன் எனலாம்.
சரி வேறு என்ன இதன் சிறப்புகள்?
1. நேர்குத்தாக மட்டுமல்லாமல், கிடைமட்டமாகவும் XCM4 வேலை செய்யும்.
2. Rising எனப்படும் உயர்கிற வேகம் அலாதியானது.
3. தரமான துணை உறுப்புகள் என்பதால், பராமரிப்பு நீண்ட காலத்திற்கு தேவையில்லை.
4. இதன் இரும்புக் கயிறு வழக்கமான டவர் கிரேன்களில் பயன்படுத்தப்படும் இரும்புக் கயிறுகளை விட உறுதியானது.
5. டவர் கிரேன் கேபிள் அது நவீனமானது. இதில் அமர்ந்து டவர் கிரேனை எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஆப்ரேட்டர்களை இயக்கலாம் என்கிறது ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் விற்பனை தரப்பு.
XCM4 -ன் பாதுகாப்பு விrயங்கள்
1. 8டன் முதல் 10 டன் வரை கையாளக்கூடிய இரும்புக் கயிறுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஸ்விஸ் ஸ்டெட்டர் நிறுவனம் பயன்படுத் துகிறது.
2. உறுதியான அடித்தளம் இருப்பதால் கிரேனின் ஸ்திரத் தன்மைக்கு உத்திரவாதம்.
3. லிப்டிங் மற்றும் மூவிங் சிஸ்டம் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது.
4. அடிக்கடி இயக்கப்படும் பாகங்களில் தானகவே உராய்வு எண்ணைய், கிரீஸ் போன்றவை அப்ளை அகும்படி (Automatically Applying) வடிவமைக்கபட்டிருப்பதால் மெயின்டனன்ஸ் என்பது XCM4 டவர் கிரேன் களைப் பொறுத்தவரை ஈஸியோ ஈஸி.
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பாவ்மா கண்காட்சியில் பலரின் கவனத்தையும் இது பெற்றுள்ளது. ஏறத்தாழ 180 கட்டுமான நிறுவனங்கள் இது குறித்த மேலதிக விவரங்களைக் கேட்டறிந்து ஆர்டர் செய்யவிருக்கின்றனவாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2063714
|